Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்த 2 பெரிய அதிர்ச்சி.. சறுக்கிய இடத்திலேயே எழுந்த இந்திய அணி.. என்ன நடக்கிறது மைதானத்தில்

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ : SEMI FINAL: அடுத்தடுத்த 2 அதிர்ச்சி! சறுக்கிய இடத்திலேயே எழுந்த இந்தியா

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் அதில் இருந்து இந்திய அணி மீண்டு வந்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் செமி பைனல் போட்டிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது செமி பைனல் போட்டி நடந்து வருகிறது.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாஹல் கொண்டு வரப்பட்டுள்ளார்.

மோசம்

மோசம்

இதில் இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் தொடங்கி உள்ளது. இந்தியாதான் இந்த போட்டியில் டாஸ் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியா பாதிப்பு

இந்தியா பாதிப்பு

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் நடக்கிறது. இது பவுலர்களுக்கு மிகவும் சவாலான பிட்ச் ஆகும். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி கண்டிப்பாக 280+ ரன்களை எளிதாக எடுக்க முடியும். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

கஷ்டம்

கஷ்டம்

நல்ல பேட்டிங் ஆர்டர் இருந்தால் 300+ ரன்களை கூட எடுக்க முடியும். ஆனால் இரண்டாவது களமிறங்கும் இந்தியா 250+ ரன்களை எடுப்பதே கடினம். இது இந்திய அணிக்கு முதல் அதிர்ச்சி ஆகும். சேசிங் செய்யும் போது இந்திய அணி மிகவும் கவனமாக ஆட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு அதிர்ச்சி

இன்னொரு அதிர்ச்சி

இதில் இந்திய அணிக்கு இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால் போட்டி தொடங்கி முதல் பந்திலேயே இந்தியா தனது டிஆர்எஸ் ரிவ்யூவை இழந்துவிட்டது. புவனேஷ்வர்குமார் போட்ட முதல் பந்தில் மார்ட்டின் குப்தில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது பந்து சரியாக அவரின் பேடில் பட்டது. இதற்கு கோலி உடனே ரிவ்யூ கேட்டார்.

செம

செம

ஆனால் இந்த பந்தில் விக்கெட் விழவில்லை. பந்து ஸ்டம்பை நோக்கி செல்லாமல், விலகி சென்றது. இதனால் டிஆர்எஸ் ரிவ்யூவில் இந்தியா தோல்வி அடைந்தது. இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது .

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அதற்கு அடுத்த நான்காவது ஓவரிலேயே பும்ரா குப்தில் விக்கெட்டை எடுத்தார். சரியாக பும்ரா போட்ட பந்து குப்தில் பேட்டில் பந்து பட்டு எட்ஜாகி கோலி கையில் போய் விழுந்தது. நியூசிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது. இதனால் தொடக்கத்தில் அதிர்ச்சியை சந்தித்தாலும் ஆட்டத்தை ஆரம்பத்திலேயே தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது இந்திய அணி.

Story first published: Tuesday, July 9, 2019, 16:05 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+