Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா- பாக் போட்டிக்கும் ஆப்பு இருக்கு.. ஆட்டம் நடக்குமா? செக் மேல் செக்!

Recommended Video

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா- பாக் போட்டிக்கும் ஆப்பு இருக்கு

லண்டன்: இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்குமா என்பதே சந்தேகமான விஷயமாக இருக்கிறது என்று தகவல்கள் வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் நடந்து வருகிறது. இந்த தொடரின் பெரிய பிரச்சனையாக மழை உருவெடுத்து உள்ளது.

எப்போது எந்த மைதானத்தில் மழை பெய்யும், எப்போது எந்த போட்டி ரத்தாகும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. இந்தநிலையில்தான் இனி நடக்க இருக்கும் போட்டிகள் குறித்தும் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இதுவரை நடக்கவில்லை

இதுவரை நடக்கவில்லை

மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக நேற்று நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டது . இதனால் மொத்தம் 4 போட்டிகள் இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல்முறை

முதல்முறை

இதுவரை எந்த உலகக் கோப்பை தொடரிலும் இப்படி நடந்தது கிடையாது. ஆம், சில உலகக் கோப்பை தொடரில் 1 போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சில தொடரில் 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் எங்கும் 3 அல்லது 4 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது கிடையாது.

இனி என்ன

இனி என்ன

இந்த நிலையில் இனி வரும் போட்டிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. அதன்படி இன்று இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் மழை பெய்யாது என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாளை எப்படி

நாளை எப்படி

அதே போல் நாளை சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடக்கிறது. நாளையும் லண்டனில் நல்ல வானிலை நிலவும். நாளை ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதும் போட்டியும், ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியும் நடக்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி இரவிற்கு மேல் மழையால் தடைபடும் என்று கூறுகிறார்கள்.

இந்தியா பாகிஸ்தான் போட்டி

இந்தியா பாகிஸ்தான் போட்டி

அதேபோல்தான் இந்திய பாகிஸ்தான் போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என்கிறார்கள். மழையால் பாதிக்கப்படவில்லை என்றாலும், மைதானத்தில் கண்டிப்பாக நீர் தேங்கி இருக்கும். இதனால் இந்த போட்டி கண்டிப்பாக நடக்காது. மைதானம் விளையாடும் நிலையிலேயே இருக்காது என்று கூறுகிறார்கள். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, June 14, 2019, 12:29 [IST]
Other articles published on Jun 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+