Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா ஆஸி. அணியை வீழ்த்தும்.. வாயை பிளக்க வைக்கும் காரணம்.. அடித்து சொல்லும் அந்த வீரர்!

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியை இந்திய அணி எளிதாக வெல்லும் என்று முக்கியமான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

உலகமே இன்று நடக்கும் உலகக் கோப்பை போட்டியைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆம், இன்று நடக்கும் ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு இடையிலான லீக் போட்டி இந்த தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இரண்டு முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பி உள்ளதால் ஆஸ்திரேலியா வலுவாக உள்ளது. தவான் தவிர எல்லோரும் பார்மில் இருப்பதால் இந்திய அணியும் வலுவான நிலையில் இருக்கிறது.

என்ன கணிப்பு

என்ன கணிப்பு

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் யார் வெல்வார் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அப்படித்தான் தற்போது பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அவர் வெளியிட்ட வீடியோவில், ஆஸ்திரேலியா இந்தியா மோதும் போட்டியைத்தான் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆஸ்திரேலியா மிகவும் வலுவான அணிதான். ஆனால் இந்தியா மிகவும் வித்தியாசமான அணி. இந்தியாவில் வீரர்கள் சீராக இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையில் ஒரு பேலன்ஸ் இருக்கிறது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

முக்கியமாக இந்திய அணியில் நல்ல பவுலிங் ஆர்டர் இருக்கிறது. இரண்டு ஸ்பீட் பவுலர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆல் ரவுண்டர் பவுலர் இருக்கிறார். அதேபோல்தான் ஒரு பார்ட்டைம் பவுலர் இருக்கிறார். இது போக முக்கியமாக இரண்டு ஸ்பின் பவுலர்கள் இருக்கிறார்கள். இதுதான் அவர்களின் பலம்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் ஆஸ்திரேலியா அணியிடம் அப்படி எல்லா வீரர்களும் இல்லை. ஆஸ்திரேலியா அணியில் சரியாக ஸ்பின் பவுலர்கள் இல்லை. அவர்களிடம் பேட்டிங் ஆர்டர் மட்டுமே இருக்கிறது. அதிலும் மூன்றாவது வீரர்கள் அவர்கள் அணியில் சரியாக விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். இதனால் அவர்கள் தோல்வி அடையவே வாய்ப்பு அதிகம்.

பேட்டிங்

பேட்டிங்

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நன்றாகவே இருக்கிறது. முதல் நான்கு வீரர்கள் இந்திய அணியில் சரியாக விளையாடினால் போதும். மற்ற எல்லா வீரர்களும் சொதப்பினாலும் கூட, இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றுவிடும். இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவும், கோலியும் முக்கிய காரணிகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

எளிமையாக வெல்லும்

எளிமையாக வெல்லும்

ஆஸி அணியின் விக்கெட்டுகளை இந்திய அணி தொடக்கத்திலேயே எடுக்க வேண்டும். இதை செய்தால் இந்திய அணி எளிதாக வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று அக்தர் கூறியுள்ளார். இவரின் பேட்டிங் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Story first published: Sunday, June 9, 2019, 11:59 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+