இப்படியா போட்டிகளை நடத்துவது.. இந்திய அணிக்கு செக் வைத்த ஐசிசி.. வீரர்களுக்கு புதிய தலைவலி!
லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் வேளையில் இந்திய அணிக்கு புதிய தலைவலி ஒன்று வந்துள்ளது. வீரர்களின் அதிகபட்ச திறனை சோதிக்க போகும் தலைவலி இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டி தொடங்கி எல்லா அணிகளும் இரண்டு போட்டிகளை விளையாடி இருந்தாலும் கூட, இந்தியா தனது ஆட்டத்தை மிகவும் தாமதமாகத்தான் தொடங்கியது.
உதாரணமாக முதல் வாரத்திலேயே தென்னாப்பிரிக்கா அணி முதல் மூன்று போட்டிகளை உலகக் கோப்பை தொடரில் விளையாடிவிட்டது. இதுவே அந்த அணியின் தொடர் தோல்விக்கும் காரணமாக இருந்தது.

ஆனால் இல்லை
ஆனால் இந்தியா உலகக் கோப்பை தொடரில் ஒரு வாரத்திற்கு பின்பே விளையாட தொடங்கியது. இந்திய அணியின் போட்டிகள் தாமதமாகவே நாள் குறிக்கப்பட்டு இருந்தது. ஐபிஎல் போட்டிகள் காரணமாக குறைந்தபட்சம் இந்திய அணி 2 வாரமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் ஐபிஎல் வேகமாக முடிந்த காரணத்தால் இந்திய வீரர்கள் சுமார் 24 நாட்கள் ஓய்வு எடுத்தனர். அதன் பின்பே உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டனர்.

என்ன சிக்கல்
இந்த நிலையில் இதுவே தற்போது இந்திய அணிக்கு சிக்கலாகி உள்ளது. எல்லா அணிகளும் 8 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் இந்திய அணி மட்டும்தான் 7 போட்டிகள் விளையாடி இருக்கிறது. இதனால் இந்தியா இன்னும் வேகமாக இரண்டு போட்டிகளை விளையாட வேண்டும்.

எப்படி முக்கியம்
ஏற்கனவே கடந்த ஜூன் 27ம் தேதிதான் இந்தியா மேற்கு இந்திய தீவுகளை எதிர்கொண்டது. அதன்பின் ஜூன் 30ம் தேதிதான் இந்தியா இங்கிலாந்து போட்டி நடந்தது. இன்று இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதையடுத்து ஜூலை 6ம் தேதி இந்தியா இலங்கை போட்டி நடக்கிறது. இதனால் வெறும் 10 நாட்களில் இந்தியா 4 போட்டிகளை விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

என்ன பிரச்சனை என்ன பிரச்சனை
இதனால் பின் வரும் பிரச்சனைகள் இந்திய வீரர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
1. ஏற்கனவே இந்திய அணியில் தவான், விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்கள் காயம் அடைந்துவிட்டனர். புவனேஷ்வர்குமார் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதற்கு இடையில் அடுத்தடுத்த போட்டிகளால் வேறு வீரர்கள் யாரும் காயம் அடைய கூடாது.
2. தொடர் போட்டிகள் காரணமாக சரியான ஓய்வு இருக்காது.
3. தொடர் போட்டிகள் அழுத்தத்தை அதிகரிக்கும்.
4. அணியில் போதுமான மாற்றங்களை, முடிவுகளை எடுக்க நேரம் கிடைக்காது.
இதனால் இப்படி ஒரே வாரத்தில் அதிக போட்டிகள் நடப்பது இந்திய அணிக்கு சிக்கலை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications