For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்கதான் எப்போதும் கிங்.. ஆஸி.யை தொடர்ந்து செமி பைனலுக்கு சென்ற இந்தியா.. சாதனை!

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளது.

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளது. இதன் மூலம் செமி பைனலுக்கு தேர்வாகும் இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டது.

அதேபோல் வரிசையாக இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து வந்தது. முக்கியமாக ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளை கூட எளிதாக வென்றது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

தென்னாப்பிரிக்காவுடன் வெற்றி, ஆஸ்திரேலியாவுடன் வெற்றி, பாகிஸ்தான் அணியுடன் வெற்றி என்று இந்தியா வீறு நடை போட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக தடைபட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி மிகவும் தீவிரமாக சென்று கடைசி நேரத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

ஒரே ஒரு தோல்வி

ஒரே ஒரு தோல்வி

இதற்கு இடையில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது. தோல்வியே அடையாமல் வரிசையாக வெற்றிகளை குவித்து வந்த இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஆனால் இது இந்திய அணியை பெரிய அளவில் பாதிக்கவில்லை.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்த நிலையில் தற்போது வங்கதேசம் அணிக்கு எதிராக இந்தியா வெற்றிபெற்று இருக்கிறது. 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது. இந்தியா, வங்கதேசம் அணிக்கு அதிரடியாக 315 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 104, கே எல் ராகுல் 77 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்கள். இந்த வலுவான இலக்கை நோக்கி வங்கதேசம் நிதானமாக ஆடியது. கடைசியில் 286 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது.

செமி பைனல்

செமி பைனல்

இதன் மூலம் 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று 1 போட்டி மழையால் தடைபட்டு 1 போட்டி தோல்வி என்று இந்தியா 13 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அந்த செமி பைனலுக்கு இரண்டாவது அணியாக நுழைந்து உள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலியா செமி பைனலுக்கு நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 2, 2019, 23:12 [IST]
Other articles published on Jul 2, 2019
English summary
ICC World Cup 2019: India wins against Bangladesh, Enters into semi-final after Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+