Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காவியா? கூடவே கூடாது.. பிசிசிஐயில் எதிர்ப்பு குரல்..இந்திய அணி ஜெர்சியில் நீடிக்கும் குழப்பம்!

லண்டன்: இந்திய அணிக்கு சரியான மாற்று உடையை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீலத்திற்கு பதிலாக வேறு என்ன நிறத்தில் உடை தேர்வு செய்வது என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை இருந்து வருகிறது.

இந்திய அணி தனது புதிய ஜெர்சியை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் விரைவில் இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரண்டும் ஹோம் அணி. இதனால் இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் தங்களது ஜெர்சியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாற்றம் தேவை

மாற்றம் தேவை

அந்த இரண்டு நாடுகளும் தங்கள் ஜெர்ஸியை மாற்ற தேவையில்லை. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நீல நிற உடை கொண்டது. வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, ஆகியவை பச்சை நிற உடை கொண்டது. இதனால் இந்த அணிகள் மோதும் போது ஒரே நிற ஜெர்ஸிக்கு பதிலாக மாற்று ஜெர்சியை அணிய வேண்டும்.

என்ன தேவை

என்ன தேவை

இதனால் ஏற்கனவே இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் புதிய ஜெர்சியை அறிவித்துவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி தனது புதிய ஜெர்சியை அறிவிக்கவில்லை. இந்தியா எப்போது தனது புதிய ஜெர்சியை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் விளையாடும் போட்டி 22ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி மாற்று ஜெர்சியை அணிய வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி நீல நிற உடையை அணியும். இதனால் இந்தியா உடையை மாற்ற வேண்டும். இதுதான் தற்போது அவசரமான உடை தேர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.

என்ன கலர்

என்ன கலர்

தற்போது காவி நிற உடையை தேர்வு செய்ய பிசிசிஐயில் சிலர் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். காவி அதிகமாகவும், நீலம் குறைவாகவும் இருக்கும் படி உடையை வடிவமைக்க பிசிசிஐ முடிவெடுத்து உள்ளது. மத்திய பாஜக அரசுக்கும் காவி பிடிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.

ஏன் எதிர்ப்பு

ஏன் எதிர்ப்பு

ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்திய அணிக்கு காவி நிறம் கொடுக்க கூடாது. இது அணியில் பாகுபாட்டை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இதனால் சிவப்பு நிறத்தை இந்திய அணி தேர்வு செய்யலாம் அல்லது மிலிட்டரி ஷேட் கொண்ட கலரை தேர்வு செய்யலாம். ஆஷ் கலரை தேர்வு செய்யலாம் என்று கூறி உள்ளனர்.

பெரிய குழப்பம்

பெரிய குழப்பம்

இதனால் இந்திய அணியில் தற்போது பெரிய குழப்பம் நீடித்து வருகிறது. புதிய உடை எப்போது வெளியாகும் என்று கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Story first published: Tuesday, June 4, 2019, 14:01 [IST]
Other articles published on Jun 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+