Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது போதும்.. இந்திய அணியை யாராலும் அசைக்க முடியாது.. கோலி போடும் மாஸ் கணக்கு இதுதான்!

லண்டன்: நியூஸிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் புதிய திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறார்கள். முக்கியமாக கோலி மிக முக்கியமான மாற்றங்களை இந்திய அணியில் செய்ய போகிறார் என்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிக மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கிரிக்கெட் போட்டியை மழை அடிக்கடி இடைஞ்சல் செய்து வருகிறது.

இந்த மழையால், இதுவரை மூன்று போட்டிகள் தடை பட்டுள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டி மழையால் தடைபடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இன்று மோதல்

இன்று மோதல்

இன்று நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் போட்டி நடக்கிறது. உலகக் கோப்பையின் மிக முக்கியமான இந்த தொடரில் யாரு வெற்றிபெறுவார் என்பதை பொறுத்தே புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்படும். நியூசிலாந்து இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் மூன்றிலும் வென்றுள்ளது. அந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

அதேபோல்தான் இந்தியாவும், இந்திய அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வென்றுள்ளது. அதிலும் இந்திய அணியானது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி இருக்கிறது. இதனால் இந்திய அணி இன்று எப்படி விளையாடும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணியில் தற்போது தொடக்க வீரர் தவான் காயத்தில் இருக்கிறார். அவரால் இன்னும் மூன்று போட்டிகளுக்கு விளையாட முடியாது. இதனால் இந்திய அணிக்கு புதிய ஓப்பனிங் வீரரை களமிறக்க வேண்டும். இதுதான் தற்போது கோலிக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.

என்ன திட்டம்

என்ன திட்டம்

இதற்காக கோலி ஒரு திட்டம் வைத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். அதன்படி, இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக கண்டிப்பாக கே எல் ராகுல்தான் ரோஹித் சர்மாவுடன் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். இதனால் கே எல் ராகுலின் இடத்தில் விஜய் சங்கர் இறங்குவார் என்றும் கூறுகிறார்கள்.

வலுவாக இருக்கும்

வலுவாக இருக்கும்

இதன் காரணமாக இந்திய அணி மிகவும் வலுவாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அதன்படி இந்திய அணியில் ஓப்பனிங் செய்ய கே எல் ராகுல், ரோஹித் சர்மா இறங்குவார்கள். கோலி ஒன் டவுன் இறங்குவார். விஜய் சங்கர் நான்காவது வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

ஏன் முக்கியமாக

ஏன் முக்கியமாக

இதில் விஜய் சங்கர் பவுலர் மற்றும் பேட்ஸ்மேன் என்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பவுலிங் ஆப்ஷன் கிடைக்கும். இதனால் இந்திய அணியை இந்த போட்டியை யாராலும் அசைக்க முடியாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Story first published: Thursday, June 13, 2019, 9:57 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+