Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியை அடுத்து முதல் அதிரடி.. இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து நீக்கப்படும் மிக முக்கிய புள்ளி!?

Recommended Video

இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து நீக்கப்படும் மிக முக்கிய புள்ளி!?

லண்டன்: உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து மிக முக்கியமான புள்ளி ஒருவர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறி இருக்கிறது. செமி பைனல் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.

இதையடுத்து இந்தியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது. இதனால் இந்திய அணி நிர்வாகிகள் மீது பிசிசிஐ அமைப்பு கடும் கோபத்தில் உள்ளது.

என்ன நீட்டிப்பு

என்ன நீட்டிப்பு

தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாதத்திற்கு பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு

சிறப்பு

இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் இந்திய அணியின் பவுலிங்கிற்கு புதிய முகம் கொடுத்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் பீல்டிங்கும் மிக சிறப்பாக உள்ளது. பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் வீரர்களை நல்ல பார்மிற்கு கொண்டு வந்துள்ளார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சரியாக செயல்படவில்லை. எப்போதும் பேட்டிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி இவரின் பயிற்சிக்கு கீழ் சரியாக செயல்படவில்லை. விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களால் கூட இவரின் பயிற்சிக்கு கீழ் சதம் அடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு சஞ்சய் பங்கர் மோசமாக செயல்பட்டு இருக்கிறார்.

என்ன மோசம்

என்ன மோசம்

அதேபோல் இவரின் பயிற்சிக்கு கீழ்தான் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமான சரிவை சந்தித்துள்ளது. சரியாக ஆடாத விஜய் சங்கருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க பரிந்துரைத்ததும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரர்களுக்கு காயம் குறித்த விழிப்புணர்வை கூட இவர் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீக்க வாய்ப்புள்ளது

நீக்க வாய்ப்புள்ளது

இதனால் சஞ்சய் பங்கர் பதவியை பிசிசிஐ நீட்டிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். சஞ்சய் பங்கர் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வாரமே இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Story first published: Friday, July 12, 2019, 18:21 [IST]
Other articles published on Jul 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+