Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அப்படி செய்திருந்தால் இந்தியாவே தோற்று இருக்கும்.. நல்லவேளை.. உண்மையை உடைத்த பயிற்சியாளர்!

Recommended Video

தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய பயிற்சியாளர்

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோனி ஆடிய ஆட்டம் குறித்து இந்திய அணியின் பவுலிங் கோச் பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் நடக்கும் போட்டிகளில் மிக முக்கியமான போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தியா இன்னும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியேறவில்லை. ஆம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோசமாக விளையாடியது இன்னும் வீரர்களுக்கு ஒரு பக்கம் வருத்தமான ஒன்றாக இருக்கிறது.

தோனி

தோனி

முக்கியமாக இந்த போட்டியில் தோனி மோசமாக ஆடினார். தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார். தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார். இதனால் தோனிக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அவர் உடனே ஓய்வு பெற வேண்டும் என்று பல ரசிகர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

பயிற்சியாளர் கருத்து

பயிற்சியாளர் கருத்து

இந்த நிலையில் தோனியின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தோனியின் ஆட்டம் குறித்து நாங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். வீரர்கள், பயிற்சியாளர்கள் இடையே எப்போதும் வீரர்களின் பேட்டிங் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டேதான் இருக்கும்.

தலைமை பயிற்சியாளர்

தலைமை பயிற்சியாளர்

பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூட தோனியுடன் ஆலோசனை செய்தார். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்று என்னால் கூற முடியாது. ஆனால் வீரர்களின் விளையாட்டை மாற்றும் வகையில் நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்;. தோனியின் ஆட்டம் அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டே இருந்தது. அதில் தவறில்லை.

ஒருவேளை

ஒருவேளை

ஒருவேளை அன்று நடந்த போட்டியில் தோனி அதிரடியாக ஆடுகிறேன் என்று சென்று அவுட்டாகி இருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும். இந்தியா தோல்வி கூட அடைந்திருக்கும். தோனி அதை செய்யவில்லை. நாங்கள் அளித்த டோட்டலை வைத்து வென்று இருக்கிறோம். அதனால் அதை பற்றி இப்போது நினைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

அன்று போட்டி நடந்த மைதானம் தொடக்கத்தில் ஸ்பின் பவுலிங் செய்ய சாதகமாக இருந்தது. அதனால் ஆப்கானிஸ்தான் ஸ்பின் பவுலர்கள் வரிசையாக வந்து பந்து வீசினார்கள். ஆனால் போக போக ஆட்டம் மாறியது. இதனால் குறிப்பிட்ட ஒரு வீரரை மட்டும் விமர்சனம் செய்வது சரியாக இருக்காது என்று அருண் கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, June 27, 2019, 12:56 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+