Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. அணியின் 20 வருட சாதனை.. அசால்ட்டாக அடித்து நொறுக்கிய கோலி படை.. இந்தியா புது சரித்திரம்!

Recommended Video

INDvsAUS | ஆஸ்திரேலியாவை அதிரடியால் வீழ்த்தியது இந்தியா

லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணியின் 20 வருட சாதனையை முறியடித்து அவர்களின் மகுடத்தை பறித்து இருக்கிறது இந்திய அணி.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே நடந்த போட்டிதான் இந்த தொடரில் இதுவரை நடந்த மிக விறுவிறுப்பான ஆட்டம் என்று கூட கூறலாம்.

சீட்டிற்கு நுனியில் அமர்ந்து திரில் படம் பார்த்தது போல இந்திய அணியின் ரசிகர்கள் எல்லோரையும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிர வைத்துவிட்டார்கள்.

எப்படி தொடங்கியது

எப்படி தொடங்கியது

இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் பிட்ச் என்பதால் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்களின் நிதானமான ஆட்டத்துடன் போட்டி துவங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை இந்திய அணி அடித்த துவைத்து. இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அதிரடியாக ஆடினார்கள். இதனால் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது.

யார் எவ்வளவு

யார் எவ்வளவு

அதன்படி ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியை ஆஸ்திரேலிய அணியால் சமாளிக்க முடியவில்லை. அந்த அணியில் ஸ்டோனிஸ் மட்டும் அதிகமாக 2 விக்கெட் எடுத்தார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மிகவும் நிதானமாக ஆடியது. ஸ்மித் 69, வார்னர் 56, கேரி 55 ரன்கள் எடுத்தனர். ஆனாலும் அந்த அணியால் இந்திய அணி அடித்த இலக்கை எடுக்க முடியவில்லை. இந்திய அணிக்கு திகில் ஊட்டினாலும் வரிசையாக அந்த அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

இந்த நிலையில் சரியாக 50 ஓவர் முடியும் போது அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதன்படி 50 ஓவரில் 10 விக்கெட்டிற்கு 318 ரன்கள் மட்டும் எடுத்தது. பும்ரா, புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் எடுத்தனர். சாஹல் மொத்தம் 2 விக்கெட் எடுத்தார்.

எப்படி முக்கியம்

எப்படி முக்கியம்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணியின் 20 வருட சாதனையை இந்தியா முறியடித்து உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை ஒன்றில் சேஸ் செய்யும் போது 1999ல்தான் தோல்வி அடைந்தது. 1993 மே 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக 10 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா சேஸ் செய்யும் போது தோல்வி அடைந்தது.

19 வரிசையாக வெற்றி

19 வரிசையாக வெற்றி

அதன்பின் வரிசையாக 19 போட்டிகளில் உலகக் கோப்பையில் சேஸ் செய்யும் போது ஆஸ்திரேலியா வென்றது. அந்த 20 வருட சாதனையை கோலியின் படை முறியடித்து இருக்கிறது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. வெல்டன் பாய்ஸ்!

Story first published: Sunday, June 9, 2019, 23:50 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+