For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாதியில் சென்ற கோலி.. பவுலிங் போடாத புவனேஷ்வர்.. தோனி செய்த தவறு.. ஏன் இத்தனை சர்ச்சைகள்?

நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் நிறைய பிரச்சனைகள், சர்ச்சைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | பாதியில் சென்ற கோலி., பவுலிங் போடாத புவி !தொடர்ந்த சர்ச்சைகள்?

லண்டன்: நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் நிறைய பிரச்சனைகள், சர்ச்சைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. இது தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பாகிஸ்தான் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி நடந்தது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இதில் மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்ன சர்ச்சைகள்

என்ன சர்ச்சைகள்

இந்த போட்டியில் இந்திய அணி பல்வேறு விஷயங்களுக்காக சர்ச்சையில் சிக்கியது. முக்கியமாக அணியின் தூண்கள் என்று கருதப்படும் வீரர்கள் நிறைய தவறுகள் செய்தனர். வேண்டும் என்றே மேம்போக்காக வீரர்கள் விளையாடியது போன்று இருந்தது. இதுகுறித்து பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தோனி தவறு

தோனி தவறு

நேற்று நடந்த போட்டியில் குல்தீப் போட்ட ஓவர் ஒன்றில் தோனி இரண்டு முறை தவறு செய்தார். பாபர் அசம் எல்பிடபில்யூ முறையில் அவுட்டானார். ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதை சரியாக கவனித்த கோலி டிஆர்எஸ் எடுக்கலாமா என்று தோனியிடம் ஆலோசனை கேட்டார். ஆனால் தோனி பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறினார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் படவில்லை, பேடில்தான் பட்டது, அதனால் விக்கெட்தான் என்பது தெளிவாக தெரிந்தது.

இன்னொரு தவறு

இன்னொரு தவறு

அதே போல், அதே ஓவரில் தோனிக்கு நல்ல ஸ்டம்பிட் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் தோனி பந்தை சரியாக பிடிக்காமல் தாமதம் செய்ததால் அந்த விக்கெட்டை நழுவ விட்டார். இப்படி தோனி நேற்று நிறைய முறை கொஞ்சம் கவலை இல்லாமல் விளையாடினார்.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

அதேபோல் நேற்று விராட் கோலி 77 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அவுட்டாகாமல், பந்து பேட்டில் பட்டதாக நினைத்து வெளியேறினார். நடுவர் அவுட் கொடுக்காமலே இவர் அவுட் என்று நினைத்து, வெளியேறினார். அதேபோல் நேற்று கோலி இரண்டாம் பாதியில் இந்திய அணி திணறிக் கொண்டு இருந்த போது பெரும்பாலும் கேப்டன்சி செய்யாமல் பெவிலியனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார்

இதெல்லாம் போக நேற்று புவனேஷ்வர் குமார் வேறு தேவையில்லாமல் வழுக்கி விழுந்தார். ஈரமான தரை இருப்பது தெரிந்தும் அவர் காலை தேவையில்லாமல் மாற்றி வைத்து பவுலிங் போட்டு வழுக்கிக் கொண்டார். ஆனால் தரை வழுக்குவது தெரிந்து பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் கவனமாக ஆடினார்கள்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணிதான், வீழ்த்தி விடலாம் என்ற மிதப்பில் இந்திய அணியினர் இப்படி செய்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள் . போட்டியின் போது கூலாக இருக்கலாம். ஆனால் இவ்வளவு கூலா.. எப்படியோ வெற்றிபெற்றதற்கு வாழ்த்துக்கள் பாய்ஸ்!

Story first published: Monday, June 17, 2019, 12:49 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
ICC World Cup 2019: Indian team faced some issues in the match against Pakistan yesterday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+