Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளை போட்டி.. இன்று போய் இப்படி நடக்குதே.. கலக்கத்தில் இந்திய வீரர்கள்.. என்னதான் ஆச்சு?

Recommended Video

WORLD CUP 2019: IND VS WI | நாளை போட்டி! இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு?- வீடியோ

லண்டன்: இந்திய அணி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் போட்டி நாளை நடக்க உள்ள நிலையில் நேற்றும் இன்றும் இந்திய அணி வீரர்கள் முக்கிய பிரச்சனை ஒன்றால் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் சுமந்து நடந்து வருகிறது. முக்கியமான அணிகள் இந்த தொடரில் அதிர்ச்சியளித்து தோல்வி அடைகிறது.

யாருமே எதிர்பாக்காத அணிகள் எல்லாம் வெற்றியை பெற்று வாயை பிளக்க வைக்கிறது. அப்படி கொஞ்சம் கூட யூகிக்க முடியாத ஒரு அணிதான் மேற்கு இந்திய தீவுகள் அணி. வரிசையாக தோல்வியை தழுவி வரும் இந்த வலிமையான மேற்கு இந்திய தீவுகள் அணியைத்தான் இந்தியா நாளை எதிர்கொள்ள இருக்கிறது.

என்ன செய்கிறார்கள்

என்ன செய்கிறார்கள்

இந்த போட்டிக்காக்க இந்திய வீரர்கள் நேற்று தீவிரமாக பயிற்சி செய்தனர். இந்த போட்டி நாளை ஓல்ட் டிரபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இங்குதான் நடைபெற்றது. இது பேட்டிங் பிட்ச் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற முறை இங்கு போட்டி நடந்த போது அடிக்கடி மழை குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.

எப்படி மழை

எப்படி மழை

இந்தநிலையில் அங்கு தற்போதும் மழை பெய்து வருகிறது. ஆம் அங்கு நேற்று மாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. அங்கு நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் மழையால் போட்டி தடை பட வாய்ப்புள்ளதா என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

சிக்கல் என்ன

சிக்கல் என்ன

ஆனால் மழை காரணமாக இந்திய வீரர்கள் சரியாக பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. ஆம் மழையால் வீரர்கள் வெளியே மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக வீரர்கள் தற்போது உள் அரங்கில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதனால் வீரர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நாளை போட்டியை வைத்துக்கொண்டு இப்படி பயிற்சி செய்ய முடியவில்லையே என்று வீரர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

எப்படி

எப்படி

பெரும்பாலும் உள் அரங்கில் பயிற்சி செய்வதை விட வெளியே பயிற்சி செய்தால்தான் வீரர்கள் அனைத்து விதமான ஷாட்களையும், பந்துகளையும் பயிற்சி செய்து பார்க்க முடியும். ஆனால் உள் அரங்கில் இப்படி நடக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் சரியாக விளையாடவில்லை, அப்போது இந்திய வீரர்கள் சரியாக பயிற்சியும் செய்யவில்லை. இந்த நிலையில் இன்றும் பயிற்சி தடைபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 26, 2019, 9:55 [IST]
Other articles published on Jun 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+