கோலி இப்போது எப்படி இருக்கிறார்.. நாளை போட்டியில் களமிறங்குவாரா? அணி நிர்வாகம் சொல்வது இதுதான்!
லண்டன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நாளை நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் கோலி களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளது.
எல்லா அணிகளும் குறைந்தது ஒரு போட்டியையாவது விளையாடிவிட்டது. சில நாடுகள் இரண்டு போட்டிகள் கூட விளையாடிவிட்டது. ஆனால் இந்தியா இன்னும் ஒரு போட்டி கூட விளையாடவில்லை.

நாளை
இந்த நிலையில் இந்தியாவின் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடக்க உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் நாளை நடக்கும் போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால் என்ன
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலிக்கு தற்போது விரலில் காயம்பட்டு இருக்கிறது. இந்த காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வந்தது. இதனால் அவர் விளையாடுவதில் பிரச்சனை ஏற்படலாம் என்றும் கூட தகவல்கள் வந்தது.

என்ன ஆனது
விராட் கோலி இரண்டு நாள் முன்பு பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போதுதான் காயம் ஏற்பட்டது. பேட்டிங் பயிற்சி செய்யும் போது பந்து பட்டு அவரின் பெருவிரலில் சிறிய காயம் ஏற்பட்டது. பெருவிரல் சதையில் பந்து பட்டு, சிறிதாக கிழித்தது. சதைக்கு உள்ளேயும் சிறிதாக கிழிந்தது குறிப்பிடத்தக்கது.

சோதனை செய்தனர்
அவர் கையில் ஏற்பட்ட சிறிய காயம் கிழிந்து, விரலை நகற்ற முடியாத நிலைக்கு சென்றது. இதனால் உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் இதற்காக அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். நேற்று மாலை கோலிக்கு கடைசியாக ஒருமுறை உடல் சோதனையும் செய்யப்பட்டது.

எப்படி இருக்கிறார்
இந்த நிலையில் இவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று அணி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறார். இவர் தற்போது மீண்டும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை வரை அவரால் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இன்று காலை அவர் நன்றாகவே பயிற்சி மேற்கொண்டார். அவர் விரல் குணமாகி உள்ளது.

கண்டிப்பாக ஆடுவார்
இதனால் முதல் உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக கோலி ஆடுவார். அதேபோல் கோலிதான் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்த போகிறார் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நல்ல செய்தியால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications