For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்ட்டியில் பாண்டியா ஜாலி.. மாடல் தோனி.. மாலில் கோலி.. இப்படியே போனா மேட்ச் ரிசல்ட் அம்பேல்தான்!

இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி நேரத்தை விட இங்கிலாந்தில் ஊர் சுற்றவே அதிக நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Recommended Video

பயிற்சியில் இல்லாமல் வெளியில் சுத்தும் இந்திய வீரர்கள்... வெடித்தது சர்ச்சை

லண்டன்: இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி நேரத்தை விட இங்கிலாந்தில் ஊர் சுற்றவே அதிக நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிலாந்தில் மிகவும் ஜாலியாக அவர்கள் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை ஐந்து போட்டிகள் நடந்து முடிந்துவிட்டது. தற்போது ஆறாவது போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.

இப்போதே உலகக் கோப்பை போட்டி சூடு பிடிக்க தொடங்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். நேற்று தென்னாபிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

 இந்தியா போட்டி எப்போது

இந்தியா போட்டி எப்போது

இந்த நிலையில் இந்தியா மற்றும் தென்னப்பிரிக்கா அணிகள் உலகக் கோப்பை போட்டியில் மோத இருக்கிறது. வரும் புதன் கிழமை இந்த போட்டி நடக்க உள்ளது. இந்திய உலகக் கோப்பையில் களமிறங்கும் முதல் போட்டி இதுவாகும். இதற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 தென்னாப்பிரிக்கா தயார்

தென்னாப்பிரிக்கா தயார்

இந்த போட்டிக்காக தென்னாப்பிரிக்கா தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது. முதல் போட்டியான இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. அதன்பின் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. இதனால் தற்போது தென்னாப்பிரிக்கா தீவிரமாக தயாராகி வருகிறது.

 இந்தியா இல்லை

இந்தியா இல்லை

ஆனால் இந்தியா இதுவரை பெரிய அளவில் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஒரு நாளுக்கு மிகவும் குறைந்த நேரமே இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக எப்போதும் பயிற்சி செய்து கொண்டே இருக்கும் விராட் கோலி கூட கையில் காயம் காரணமாக முடங்கி போய் இருக்கிறார்கள்.

தோனி என்ன செய்கிறார்

இந்த முறை ஆச்சர்யமாக தோனியும் பயிற்சி செய்யாமல் அதிகமாக வெளியில் நேரத்தை கழித்து வருகிறார். லண்டன் சென்ற தோனி அங்கு ஒரு விளம்பர ஷூட்டிங்கே முடித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பயிற்சி களத்திலும் பெரியதாக அவர் இல்லை.

 கோலி என்ன செய்கிறார்

கோலி என்ன செய்கிறார்

அதேபோல்தான் கோலியும் கையில் அடிபட்ட காரணத்தால் தற்போது மால் மாலாக சுற்றி வருகிறார். இவர் இன்று மாலைதான் முழுநேர பயிற்சியில் ஈடுப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார். இவர் இரண்டு நாட்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு யார்

அதேபோல் எப்போதும் இணைபிரியாத தோழர்களாக இருக்கும் பாண்டியா கேஎல் ராகுல் ஆகியோர் ஒன்றாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். இவர்கள் பார்ட்டிகளில் பலவற்றில் கலந்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

 என்ன ஆகுமோ

என்ன ஆகுமோ

ஆக மொத்தம் இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்தாலும் கூட, அதிக நேரத்தை பயிற்சியை தவிர மற்ற விஷயங்களில்தான் செலுத்தி வருகிறார்கள். இது போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி!

Story first published: Monday, June 3, 2019, 16:24 [IST]
Other articles published on Jun 3, 2019
English summary
ICC World Cup 2019: Indian team players spend more time outside the practice net, may affect match results.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+