Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரின் பவுலிங் தவறு.. நடவடிக்கை எடுங்கள்.. சர்ச்சையில் சிக்கும் இந்திய பவுலர்.. அணிக்குள் பரபரப்பு!

Recommended Video

World Cup 2019: அவர் தவறாக பவுலிங் போடுகிறார்..இந்திய வீரர் மீது எழுந்த குற்றச்சாட்டு- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவர் தன்னுடைய பவுலிங் முறைக்காக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இவருக்கு எதிராக ஐசிசியில் புகார் அளிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்பாக, விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. எந்த அணி முதல் இடத்தை பிடிக்கும், எந்த அணி செமி பைனலுக்கு முன்னேறும் என்று நிறைய கணிப்புகள் வைக்கப்பட்டு வருகிறது.

போட்டி ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் இப்போது விறுவிறுப்பாக செல்கிறது. இந்த நிலையில்தான் இந்திய அணி முக்கியமான சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பவுலராக தற்போது கேதார் ஜாதவ் இருக்கிறார். இவர் இந்திய அணியில் 6 வது அல்லது 7 வது இடத்தில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒரு போட்டியில் ஐந்து ஓவர்கள் வரை இவர் வீசுகிறார். ஆனால் இவர் ஓவரில் பெரியதாக விக்கெட் எதுவும் விழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி போடுகிறார்

எப்படி போடுகிறார்

இந்த நிலையில் இவர் பவுலிங் போடும் முறை தற்போது சர்ச்சையாகி உள்ளது. இவர் பவுலிங் போடுவது சரியான முறை கிடையாது. அவர் விதிமுறைகளை மீறி பவுலிங் செய்கிறார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஏன் சர்ச்சை

ஏன் சர்ச்சை

பொதுவாக ஐசிசி விதிப்படி பவுலிங் செய்யும் போது கையை மொத்தமாக சுற்றி, மடக்காமல் பவுலிங் செய்ய வேண்டும். இந்த விதியை மீறி பவுலிங் செய்தால் பவுலர்கள் தடை செய்யப்படுவார்கள். அதிக பட்சம் 45 டிகிரி வரை கையை சாய்த்து பவுலிங் செய்யலாம். அதற்கு மேல் கையை சாய்க்க முடியாது.

பிரச்சனை

பிரச்சனை

சுனில் நரேன், லஷித் மலிங்கா உள்ளிட்ட சில வீரர்கள் இதேபோல் பவுலிங் செய்து சர்ச்சையில் இருக்கிறார்கள். முதலில் 90 டிகிரி சாய்வாக பவுலிங் வீசி வந்த மலிங்கா, அவர் மீதான சர்ச்சைக்கு பின் தனது கையை கொஞ்சம் தூக்கி வீச தொடங்கினார். சரியாக 45 டிகிரியில் அவர் பவுலிங் வீசி வருகிறார்.

மிக மோசம்

மிக மோசம்

இந்த நிலையில்தான் தற்போது அதேபோல் கேதார் ஜாதவ் போடும் பவுலிங் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. சமயங்களில் அவர் கையை சரியாக வைத்து பந்து வீசுகிறார், சமயங்களில் அவர் கையை சாய்த்து பந்து வீசுகிறார் என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஐசிசியில் சிலர் புகார் அளிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இது இந்திய அணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 13, 2019, 11:23 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+