Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படியே நடக்கிறது.. இந்த உலகக் கோப்பை கண்டிப்பாக இந்தியாவிற்குத்தான்.. அசர வைக்கும் காரணம்!

லண்டன்: தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாதான் கோப்பை வெல்ல போகிறது என்று பலரும் கணித்து இருக்கிறார்கள். இந்த கணிப்பிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு வாரம் முன் துவங்கியது. போட்டி துவங்கிய போது தொடக்கத்தில் கொஞ்சம் மந்தமாக சென்றது.

ஆனால் செல்ல செல்ல வேகம் எடுத்த போட்டி நேற்று விஸ்வரூபம் எடுத்தது. நேற்று ஆஸ்திரேலியா இந்தியா இடையில் நடந்த உலகக் கோப்பை போட்டி மிக முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

எப்போதும் எப்படி

எப்போதும் எப்படி

உலகக் கோப்பை போட்டிகள் என்று வந்துவிட்டால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்தான் பரம வைரிகள். ஏனென்றால், இரண்டு அணிகளும் பலமுறை உலகக் கோப்பை போட்டியில் மோதி இருக்கிறது. இந்தியா மொத்தம் 136 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை ஒருநாள் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் சந்தித்துள்ளது. இதில் 77 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 49 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று இருக்கிறது.10 போட்டிகளில் எந்த விதமான முடிவும் வரவில்லை.

உலகக் கோப்பையில் எப்படி

உலகக் கோப்பையில் எப்படி

அதே சமயம் உலகக் கோப்பை போட்டிகளில் நேற்று நடந்த போட்டியையும் சேர்த்து இந்தியா 12 போட்டிகளில் 8 முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி உள்ளது. இதில் கடைசி உலகக் கோப்பையில் செமி பைனலில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

பொதுவாக ஆஸ்திரேலியா இந்தியாவிடம் உலகக் கோப்பை போட்டியில் வென்றால், அந்த தொடரில் பெரும்பாலும் வென்று கோப்பையை அடிக்கும். உதாரணமாக 1999 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. 2003ம் வருடம் மற்றும் 2015ம் வருடத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது அதன்பின் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அதேபோல்தான் இந்தியா ஆஸ்திரேலியாவை உலகக் கோப்பை போட்டி ஒன்றில் தோல்வி அடைய செய்தால், அந்த தொடரில் பெரும்பாலும் இந்தியா வெற்றிபெற்று கோப்பையை வெல்லும். உதாரணமாக 1983 உலகக் கோப்பையில் இந்தியா கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று கடைசியில் கோப்பையை வென்றது. அதேபோல் 2011 உலகக் கோப்பையில் செமி பைனலில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது. அப்போதும் கோப்பையை அடித்தது.

இப்போது

இப்போது

சென்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. அப்போது இந்தியா சரியாக கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவை இந்தியா மீண்டும் வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் உலகக் கோப்பையை இந்த முறை இந்தியாதான் வெல்ல போகிறது. கணக்குப்படி எல்லாமே சரியாக நடந்தால் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

Story first published: Monday, June 10, 2019, 11:36 [IST]
Other articles published on Jun 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+