Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவருக்கு அப்படி நடந்திருக்க கூடாது.. ஐஸில் வைக்கப்பட்ட விரல்.. கோலிக்கு ஏற்பட்ட காயத்தால் அதிர்ச்சி

Recommended Video

உலகக்கோப்பையில் ஆடுவாரா? கசிந்த தகவல்.. பரபரப்பில் ரசிகர்கள்

லண்டன்: இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி நிர்வாகம் பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி தற்போது நடந்து வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் சிறப்பாக முடிந்துள்ளது.

மிகவும் விறுவிறுப்பான போட்டிகள் இனிதான் நடக்க இருக்கிறது. முக்கிய அணிகள் நேருக்கு நேர் மோத கூடிய போட்டிகள் இனிதான் நடக்க உள்ளது.

இந்தியா போட்டி

இந்தியா போட்டி

இந்தியா தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தென்னாபிரிக்கா அணியை சந்திக்க உள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா மிகவும் வலுவாக இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா எப்போதும் தென்னாப்பிரிக்காவிடம் சொதப்பும். இதனால் இந்த போட்டி அதிக கவனம் பெறுகிறது.

ஏற்கனவே என்ன

ஏற்கனவே என்ன

ஏற்கனவே இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டங்களை ஆடியது. அதில் ஒன்றில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இன்னொரு போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக வெற்றிபெற்றது. இதனால் தற்போது இந்திய அணி கொஞ்சம் பாசிட்டிவ் மனநிலையில் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

பயிற்சி

பயிற்சி

இதனால் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். வெற்றியுடன் போட்டியை தொடங்க வேண்டும் என்பதால் அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். முக்கியமாக தென்னாப்பிரிக்காவின் பவுன்சர் பந்துகளை சமாளிக்க நிறைய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

என்ன ஆனது

என்ன ஆனது

இந்த நிலையில் இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டத்தின் போது பெரிய அதிர்ச்சி நிகழ்ந்துள்ளது. இந்திய அணியின் கேப்டனும், நம்பிக்கையுமான கோலிக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. பந்து பட்டதில் அவரின் கையில் பெருவிரவில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதுதான் இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இது ஏன் பிரச்சனை ஆகிறது என்றால், முதலில் நேற்றைய பயிற்சியின் போது கோலி கையில் காயத்திற்கு பின் ஸ்பிரே அடிக்கப்பட்டது. அதன்பின் சிறிய நேர ஓய்விற்கு பின், அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் காயம் பட்ட விரலுடன் அவரால் சரியாக விளையாட முடியவில்லை.

ஐஸ்

ஐஸ்

இதனால் சில நிமிடம் அவர் அதிக சிரமத்திற்கு உள்ளானார். அதன்பின், திடீர் என்று அவர் விரல் வீங்க தொடங்கியது. இதனால் சுதாரித்துக் கொண்ட கோலி உடனே மருத்துவரை வரவழைத்தார். அதன்பின் அவர் விரல்களை ஐஸில் வைத்து கொண்டு சென்றார்கள். இது சக வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இந்த காயம் இன்னும் 2 நாட்களுக்குள் ஆற வேண்டும். அப்படியே ஆறினாலும், கோலி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்து அணியை வழி நடத்த வேண்டும். இதனால் இந்திய அணி நிர்வாகம் பெரிய கவலையில் உள்ளது.

Story first published: Sunday, June 2, 2019, 12:22 [IST]
Other articles published on Jun 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+