Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்விக்கு ஐபிஎல்லும் ஒரு காரணம்.. அதிரடியில் இறங்கும் பிசிசிஐ.. முக்கிய மாற்றங்களை செய்ய பிளான்!

Recommended Video

World Cup 2019 : Ind Vs Nz : அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா?- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் சில மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. செமி பைனல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

அணியில் சரியாக விளையாடாமல் இருக்கும் வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் பிசிசிஐ அமைப்பு ஐபிஎல் நிர்வாகத்துடன் சேர்ந்து இந்திய அணியின் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். பல முக்கிய விஷயங்கள் குறித்து இதில் பேச உள்ளனர். ஐபிஎல் போட்டி உலகக் கோப்பை போட்டிகளில் எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது என்று ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

பார்மில் இல்லை

பார்மில் இல்லை

இந்திய அணியில் பார்மில் இருந்த வீரர்களான கே எல் ராகுல், தோனி, குல்தீப் யாதவ் ஆகியோர் ஐபிஎல் போட்டிக்கு பின்பே பார்மை இழந்தனர். இவர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அளவிற்கு சரியாக உலகக் கோப்பையில் விளையாடவில்லை. இதனால் இவர்கள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

எப்படி மாற்றியது

எப்படி மாற்றியது

அதேபோல் ஐபிஎல் போட்டிக்கும் உலகக் கோப்பை தொடருக்கும் இடையில் சரியாக ஒரு மாதம்தான் இடைவெளி இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் ஓய்வு எடுக்க முடியவில்லை. இதுவும் இந்திய வீரர்களுக்கு பெரிய அழுத்தமாக இருந்தது. இந்திய வீரர்கள் பெரிய அளவில் ஓய்வு இல்லாமல் ஐபிஎல் போட்டிக்கு பின் உலகக் கோப்பையில் விளையாட நேர்ந்தது.

ஏற்கனவே திட்டம்

ஏற்கனவே திட்டம்

ஏற்கனவே ஐபிஎல்லில் புதிதாக இரண்டு அணிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. குஜராத், புனே அணிகள் மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்ப வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஐபிஎல் அமைப்பு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதில் இந்த அணிகள் சேர்ப்பும் அடக்கம் என்கிறார்கள். அடுத்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் வீரர்கள் அணி மாற்றப்படுவார்கள் எனப்படுகிறது.

எல்லாம்

எல்லாம்

ஐபிஎல் எப்படி வீரர்களை பாதிக்கிறது. அதில் புதிதாக என்ன விஷயங்களை கொண்டு வரலாம். பயிற்சி முறைகளை எப்படி மாற்றலாம் என்பது குறித்த ஆலோசனைகளை செய்ய இருக்கிறார்கள். இதை எல்லாம் வைத்து பிசிசிஐ அமைப்புடன் நடக்கும் ஆலோசனைக்கு பின் ஐபிஎல் போட்டிகளில் நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, July 14, 2019, 14:27 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+