Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேலிடத்து அழுத்தம்.. பல சிக்கல்கள்.. விஜய் சங்கரை நீக்காத விராட் கோலி.. பின்னணி என்ன?

லண்டன்: இந்திய அணியில் இருந்து விஜய் சங்கரை நீக்காமல் தொடர்ந்து அவரை விளையாட வைப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எதுவும் அழுத்தம் காரணமாக கோலி இப்படி செய்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியில் தற்போதும் கூட 4ம் இடத்துக்கான சரியான வீரர் யார் என்று கேள்வி இருந்து கொண்டு இருக்கிறார். அந்த இடத்தில் தற்போது விளையாடும் விஜய் சங்கர் சரியாக ஆடுவதில்லை.

விஜய் சங்கருக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அவரை அணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதுவரை இல்லை

இதுவரை இல்லை

இந்த நிலையில் விஜய் சங்கர் குறித்து பேட்டி அளித்த கோலி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விஜய் சங்கர் கொஞ்சம் சரியாக ஆடினார். அவர் முன்னேறி வருகிறார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக அவர் வலுவாக காணப்பட்டார். அவர் மிகப்பெரிய ஆட்டம் ஒன்றை ஆட போகிறார். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை. விரைவில் அவர் அதிரடியாக ஆடுவார், என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

மாற்றமும் கிடையாது

மாற்றமும் கிடையாது

இதனால் இன்றைய போட்டியிலும் விஜய் சங்கர் மீண்டும் களமிறங்க போகிறார் என்கிறார்கள். தினேஷ் கார்த்திக், பண்டிற்கு வாய்ப்பு கிடைக்காது. அணியில் எந்த மாற்றமும் இருக்காது. கண்டிப்பாக சங்கருக்கு கோலி வாய்ப்பு அளிக்க உள்ளார், அவரின் பேட்டியே இதை உணர்த்துகிறது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது இந்திய அணிக்குள் சில சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

என்ன சொல்கிறார்

என்ன சொல்கிறார்

கோலியின் முடிவிற்கு அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். விஜய் சங்கரை நீக்க கூடாது என்று சிலர் கோலிக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. எல்லா இடத்திலும் அரசியல் இருக்கிறது. இதிலும் அரசியல் இருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் மூன்று முறை மோசமாக ஆடியும் விஜய் சங்கருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று ரசிகர்கள் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கோலிக்கு உண்மையில் விஜய் சங்கர் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் சிலர் கூறுகிறார்கள். விஜய் சங்கர் பயிற்சியின் போது ஆடுவதை பார்த்து அவர் மீது கோலி நம்பிக்கை வைத்துள்ளார். ரோஹித் சர்மாவை தோனி வளர்த்துவிட்டது போல விஜய் சங்கரை வளர்த்து விட கோலி நினைக்கிறார். அது இந்த போட்டியில் வேலை செய்யும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Story first published: Sunday, June 30, 2019, 13:22 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+