Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் கொடுத்த பிரஷர்.. எப்போதும் இப்படித்தான்.. கோலி, பாண்டியா அவுட்டாக தோனிதான் காரணமா?

Recommended Video

தோனி கொடுத்த பிரஷர் தான் கோலி, பாண்டியா அவுட் ஆக காரணமா ?

லண்டன்: இந்திய அணியில் பாண்டியாவும், கோலியும் முக்கியமான நேரங்களில் அவுட்டாக தோனிதான் காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி மோசமாக ஆடி உள்ளது. மொத்தம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற போட்டியிலும் இந்தியா இப்படித்தான் ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி ஆடினார்

எப்படி ஆடினார்

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே தோனி மிகவும் பொறுமையாக ஆடினார். தேவையான நேரங்களில் ஷாட் அடிக்காமல் மிகவும் நிதானமாக ஆடினார். கடைசி நேரத்தில் மட்டும்தான் தோனி அதிரடி காட்டினார். மொத்தம் 61 பந்துகள் பிடித்த தோனி 56 ரன்கள் எடுத்தார். அதுவும் கடைசி நேரத்தில் அடித்த ரன்கள் ஆகும்.

அவுட்

அவுட்

தோனி ஒரு பக்கம் ஸ்லோவாக ஆடியதால் இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது. இதனால் தோனிக்கு எதிர்பக்கம் ஆடிய வீரர்கள் மீது அதிக அழுத்தம் சுமத்தப்பட்டது. இது போட்டியிலும் எதிரொலித்தது. தோனி சரியாக ஸ்டிரைக் செய்யாத காரணத்தால் கோலி அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் கோலி தேவையில்லாத ஷாட்களை அடித்தார்.

பவுண்டரி

பவுண்டரி

இதனால் பதட்டத்தில் பவுண்டரி அடிக்கிறேன் என்று மோசமான ஷாட் அடித்து கோலி அவுட்டானார். அதற்கு அடுத்து பாண்டியாவிற்கும் இதே நிலைதான். 45 ஓவருக்கு பின்பும் தோனி அதிரடியாக ஆடாமல் மெதுவாக ஆடிக்கொண்டு இருந்தார். இதனால் பாண்டியா அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு சென்றார். இதனால் கடைசி நேரத்தில் சிக்ஸ் அடிக்கிறேன் என்று அவரும் அவுட்டானார்.

இப்படியா

இப்படியா

சென்ற போட்டியிலும் இதேபோல்தான் தோனியின் ஸ்லோ இன்னிங்சால் கோலியும், பாண்டியாவும் தேவையில்லாமல் அவுட் ஆனார்கள். இதனால் தற்போது தோனிக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் தோனி ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கு இடையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது.

Story first published: Thursday, June 27, 2019, 19:31 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+