சிஎஸ்கே அணியில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா? உண்மை என்ன? நிர்வாகி அளித்த பரபரப்பு பதில்!
Recommended Video
லண்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தோனி விலகுவதாக வெளியான செய்திகளுக்கு அணி நிர்வாகிகள் பதில் அளித்து இருக்கிறார்கள்.
இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. செமி பைனல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில்தான் இந்திய அணியில் இருந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வருகிறது. அவர் உலகக் கோப்பை தொடர் முடிந்ததுமே ஓய்வு பெறுவார் என்று செய்திகள் முதலில் வந்தது.

ஆனால் இல்லை
ஆனால் தோனி இன்னும் ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. தற்போது வரை அதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அவர் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே எப்படி
அதேபோல் தோனி சிஎஸ்கே அணியில் இருந்தும் விலக போகிறார். மொத்தமாக ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெறுவார். சிஎஸ்கே அணி நிர்வாகிகளில் ஒருவராக அவர் செயல்படுவார் என்றும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது.

விளக்கம்
தற்போது இதற்கு சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் பதில் அளித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சென்னை அணி நிர்வாகி, சிஎஸ்கே அணியில் இப்போது மாற்றம் எதுவும் செய்யும் எண்ணம் இல்லை. அம்பதி ராயுடு மட்டும் சென்னை அணியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு மாற்று தேடுகிறோம்.

கண்டிப்பாக ஆடுவார்
கண்டிப்பாக அடுத்த வருடம் தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடுவார். அவர் அணியில் இருப்பது உறுதி. அவர்தான் அடுத்த வருடமும் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்படுவார். அவர் ஓய்வு என்று வெளியாகும் செய்திகள் எல்லாம் வதந்தி, என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications