
என்ன வாய்ப்பு
இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தால் பெரும்பாலும் அந்த அணி செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பில் 90 சதவிகிதத்தை இழந்துவிடும். இதனால் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான், வங்கதேசம் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி நடந்தால் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு செமி பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

இல்லை என்றால்
அதே சமயம் இந்தியா இன்று இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான், வங்கதேசம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழக்கும். இங்கிலாந்து செமி பைனலுக்கு செல்லும். இந்த நிலையில் சில இந்திய ரசிகர்கள் இந்தியா இன்று மட்டும் தோற்க வேண்டும், அப்போதுதான் பாகிஸ்தான் வெளியேறும் என்று கூட சிலர் வேண்டி வருகிறார்கள்.

என்ன டிவிட்
இந்த நிலையில் தான் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், பாகிஸ்தானை செமி பைனலுக்குள் நுழைய விட கூடாது என்று இந்தியா இன்று விளையாடுகிறதா? செஸ் போட்டி போல இந்தியா செய்யும் ஸ்மார்ட் மூவா இது? ஆனாலும் நிறைய பேர் இன்று இந்தியா வெல்ல வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள்., என்று அவர் டிவிட் செய்துள்ளார்.
பெரிய சர்ச்சை
இவரின் இந்த டிவிட் தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இந்திய அணியின் பவுலிங் சொதப்பி வரிசையாக வீரர்கள் ரன்களை வாரி வழங்குவதால், உண்மையில் இந்தியா வேண்டும் என்றே இப்படி விளையாடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications