Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூஸியை கலங்கடிக்கும் சிஎஸ்கே படை.. டென்ஷனில் கத்திய பவுலர்கள்.. ஆட்டத்தில் அதிரடி திருப்பம்!

Recommended Video

கிண்டல் செய்தவர்களுக்கு அதிரடியில் மூலம் பதில் கூறிய ஜடேஜா

லண்டன்: நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தோனி மற்றும் ஜடேஜா இந்திய அணிக்கு பெரிய அளவில் நம்பிக்கை அளித்து வருகிறார்கள்.

இந்தியா நியூசிலாந்து இடையே தற்போது செமி பைனல் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பி வருகிறார்கள்.

முக்கியமாக நியூசிலாந்து பவுலர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்தியா 200 ரன்கள் எடுப்பதே சந்தேகம் என்ற நிலை உள்ளது.

அவுட்

அவுட்

இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக இந்த போட்டியில் அடுத்தடுத்து அவுட்டானார்கள். கோலி, ரோஹித், ஜடேஜா ஒரு ரன்களில் அவுட்டானார்கள். தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். பண்ட் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மிக மோசம்

மிக மோசம்

பண்ட் பாண்டியா மட்டும் கொஞ்சம் ஜோடி போட்டு ஆடினார்கள். ஆனால் அவர்களும் தேவை இல்லாத ஷாட்களை இடை இடையே அடித்து ஆடினார்கள். இதனால் அந்த ஜோடியும் பிரிந்தது. அதன்பின் இந்திய அணியை தோனி வந்தால் மட்டும்தான் காப்பற்றுவார் என்ற நிலை ஏற்பட்டது.

அவர்கள் வந்தனர்

அவர்கள் வந்தனர்

அப்போதுதான் இந்திய அணியில் ஜடேஜா மற்றும் தோனி இருவரும் ஜோடி போட்டு ஆட தொடங்கினார்கள். 2011களில் இந்திய அணி ஆடியது போல மிகவும் பொறுமையாக ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். ஒரு பக்கம் ஜடேஜா அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் தோனி பொறுமையாக ஆடினார்.

செம

செம

ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களால் இந்தியாவின் பக்கம் தற்போது திரும்பி வருகிறது. முக்கியமாக ஜடேஜா 3 சிக்ஸர், 3 பவுண்டரி என்று அரை சதம் அடித்துள்ளார். இவர் ஒவ்வொரு முறை சிக்ஸ் அடிக்கும் போதும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முகம் அப்படியே மாறியது. சில பவுலர்கள் டென்ஷனில் கத்த தொடங்கினார்கள்.

நம்பிக்கை இருக்கிறது

நம்பிக்கை இருக்கிறது

இவர்கள் இருவரும் தற்போது களத்தில் இருப்பதால் ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நியூசிலாந்து இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விட்டார்கள். இன்னும் சிஎஸ்கேவை அவர்களால் வீழ்த்த முடியவில்லை.

Story first published: Wednesday, July 10, 2019, 18:54 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+