இவரைத் தானே கிண்டல் செய்தீர்கள்.. இதுதான் பதிலடி.. இந்திய அணியை காக்க போராடிய பாகுபலி!
Recommended Video
லண்டன்: நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஜடேஜா மொத்தமாக போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பி உள்ளார். இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவினாலும், ஜடேஜாதான் போட்டியை கடைசி வர உயிர்ப்புடன் வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர் நியூசிலாந்து இடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. முக்கியமாக கடைசி மூன்று ஓவர்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பில் உச்சத்தை தொட்டது.
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பினார்கள். ஆனால் கடைசி நேரத்தில் தோனியும் ஜடேஜாவும் சேர்ந்து இந்திய அணியின் ஆட்டத்தை புரட்டிப் போட்டார்கள்.

என்ன இலக்கு
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றும் இன்று நடந்தது. இந்தியாவிற்கு எதிராக 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை நியூசிலாந்து அணி அடித்தது. தற்போது அந்த இலக்கை நோக்கி இந்தியா திணறி திணறி ஆடி வந்தது.

அவுட்டானார்கள்
முக்கியமாக நியூசிலாந்து பவுலர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். கோலி, ரோஹித், ஜடேஜா ஒரு ரன்களில் அவுட்டானார்கள். தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். பண்ட் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

யார் வந்தார்
அதன்பின்தான் இந்திய அணிக்காக விளையாட ஜடேஜா களமிறங்கினார். அவரும் தோனி இறங்கிய இந்த மொத்தமாக ஆட்டம் மாறியது. ஒரு பக்கம் ஜடேஜா அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் தோனி பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் இணைத்து 97 ரன்கள் எடுத்தனர்.

செம பாஸ்
2011களில் இந்திய அணி ஆடியது போல மிகவும் பொறுமையாக ஆட்டத்தை ஜடேஜா தோனி இருவரும் தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். முக்கியமாக ஜடேஜா 3 சிக்ஸர், 3 பவுண்டரி என்று அரை சதம் அடித்தார். ஆனால் அதன்பின்பும் ஜடேஜா தனது அதிரடியை விடவில்லை.

சூப்பர்
மொத்தம் 59 பந்துகள் பிடித்த அவர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் என்று 77 ரன்கள் எடுத்தார் . இந்த தொடர் முழுக்க அவரை பலர் பார்ம் இல்லாத வீரர் என்று கிண்டல் செய்தனர். ஆனால் அனைத்திற்கும் தற்போது ஜடேஜா பதிலடி கொடுத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications