போனால் போகட்டும்.. மழையால் ரசிகர்கள் கோபத்தில் இருக்க.. கொண்டாட்டத்தில் ஜடேஜா.. வைரல் போட்டோ!
லண்டன்: ஒரு பக்கம் மழை பெய்தாலும், இன்னொரு பக்கம் இந்திய அணியில் உள்ள வீரர்கள் எல்லாம் பெவிலியனின் ஜாலியாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்று நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க வேண்டும் . ஆனால் போட்டி நடக்க இருந்த டிரெண்டிபோல்ட் மைதானத்தில் மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் போட்டி கைவிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

அட
இந்த போட்டி தாமதமாகும் என்று தெரிந்தவுடன் கிரிக்கெட் வீரர்கள் பெவிலியனில் அமைதியாக டீ குடிக்க தொடங்கிவிட்டார்கள். மைதானத்தை வெறித்தபடி, இந்திய அணியின் வீரர்கள் எல்லோரும் டீ, காபி குடித்தபடி நின்று கொண்டு இருந்தனர். எல்லோரும் ஒரே மாதிரியான மப்ளர் அணிந்து, தலையை ஹூட் மூலம் மூடி அமர்ந்து இருந்தனர்.

இவர் மட்டும் கொண்டாட்டம்
இதில் ஜடேஜா மட்டும் கவலையே இல்லாமல் கொண்டாட்டமாக இருந்தார். அதேபோல் அணியில் இடம்பெறாமல் காயம் பட்டு இருக்கும் தவானும் எனக்கு என்ன பிரச்சனை என்று சந்தோசமாக இருந்தார். அவர்கள் இருவரும் அங்கும் இங்கும் நடந்து சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

ரோஹித் வருத்தம்
ஒருவேளை மழை நின்று, இந்திய அணி பேட்டிங் செய்தால், ரோஹித் முதலில் களமிறங்க வேண்டி இருக்கும். இதனால் அவர் பிட்சை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். பிட்ச் எப்படி இருக்கும் , விளையாட முடியுமா என்று பெவிலியனில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தார்.

கோலி வருத்தம்
அவருக்கு அருகில் கோலியும் நின்று கொண்டு இருந்தார். போட்டி தொடங்கினால் மழையால் போட்டி எப்படி பாதிக்கும். எத்தனை ஓவர்கள் குறைக்கப்படும் என்று பார்த்துக் கொண்டு இருந்தார். தோனிதான் இந்த சீனில் இல்லாத வீரர். கடைசி வரை அவரை பெவிலியனில் பார்க்கவே முடியவில்லை.
ஜடேஜா என்ன செய்தார்
தொடர்ந்து 2-3 கப் காபிக்கள் குடித்த ஜடேஜா பின் நேராக தவானிடம் சென்றார். தவானிடம் காபி கொடுத்தவர், பின் பிரெட்டை கொடுத்தார். அவர் அதை வாங்கவில்லை என்றதும், அவருக்கு வாயில் வைத்து ஊட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications