Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நில்லுங்க போகாதீங்க.. நிற்க முடியாது.. நடுவரிடம் மோசமாக நடந்து கொண்ட ராய்.. என்ன நடந்தது?

லண்டன்: நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் செய்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

லார்ட்ஸ் மைதானம் பவுலிங் பிட்ச் கொண்ட மைதானம் ஆகும். இங்கு சேசிங் செய்வது மிகவும் கடினம். இதனால் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

என்ன ஸ்கோர்

என்ன ஸ்கோர்

இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிகவும் நிதானமாக ஆடியது. நியூசிலாந்து அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது.

விக்கெட்

விக்கெட்

அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆட முயன்றது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த அணி திணற தொடங்கியது. முக்கியமாக ஹென்றி வீசிய ஸ்பெல்லை சமாளிக்க முடியாமல் தொடக்க வீரர்கள் ராய் மற்றும் பிரைஸ்டோ இருவரும் திணறினார்கள்.

விக்கெட்

விக்கெட்

இந்த நிலையில் ஹென்றி வீசிய 6வது ஓவரில் பவுன்சர் பந்து ஜேசன் ராய் பேட்டில் எட்ஜாகி சரியாக கீப்பர் லதாம் கையில் போய் தஞ்சம் அடைந்தது. ஆனால் பந்து பேட்டில் பட்டதா என்று நடுவருக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர் மூன்றாவது நடுவரிடம் சந்தேகம் கேட்டார். இதனால் அவர் ஜேசன் ராயை நிற்கும்படி கூறினார்.

இல்லை

இல்லை

ஆனால் ஜேசன் ராய் அங்கு நிற்கவில்லை. அதே போல நடுவரை அவர் கோபமாக திட்டவும் செய்தார். கோபமாக அவரிடம் எதோ சொல்லிவிட்டு ராய் வேகமாக மைதானத்தை விட்டு சென்றார். பின் ரிப்ளேயில் ராய் அவுட்தான் என்பது தெளிவாக தெரிந்தது. ராய் நடுவரிடம் இப்படி கோபம் அடைந்த சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.இவருக்கு இந்த போட்டி முடிந்த பின் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, July 14, 2019, 21:03 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+