Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தயவு செய்து அப்படி செய்யாதீர்கள்.. இந்திய ரசிகர்களுக்கு நீசம் வைத்த கோரிக்கை.. வெடித்த சர்ச்சை!

Recommended Video

ENG vs NZ Cricket World cup 2019 | சொந்த நாட்டில் கெஞ்சிக் கூத்தாடும் இங்கிலாந்து ரசிகர்கள்

லண்டன்: உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடக்க உள்ள நிலையில் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இன்று எல்லோரும் எதிர்பார்த்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்கிறது.

கடந்த புதன் கிழமை, நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

முடிவு பெற்றது

முடிவு பெற்றது

இதனால் இந்தியாவின் உலகக் கோப்பை பயணம் முடிவிற்கு வந்துள்ளது. பைனலுக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது. முதலில் இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காமல் செமி பைனல் போட்டியிலேயே தோல்வியை தழுவியது.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லும் என்றுதான் ரசிகர்கள் பலர் கணித்து இருந்தனர். இதனால் நூற்றுக்கணக்கில் பலர் இதற்காக டிக்கெட் வாங்கி இருந்தனர். ஆனால் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முடியவில்லை என்றதும் பலர் தங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தனர்.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

சிலர் மட்டும் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் அதை வெளியே பிளாக்கில் விற்க தொடங்கினார்கள். டிக்கெட் விலையை விட கூடுதல் விலை வைத்து சிலர் டிக்கெட் விற்க தொடங்கினார்கள். இது ஐசிசி அமைப்பிற்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் இதுகுறித்து தற்போது நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் டிவிட் செய்துள்ளார்.

ஜிம்மி நீசம் என்ன சொன்னார்

ஜிம்மி நீசம் என்ன சொன்னார்

ஜிம்மி நீசம் செய்துள்ள டிவிட்டில், அன்புள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களே, உங்களுக்கு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு வர விருப்பமில்லை என்றால் தயவு செய்து அந்த டிக்கெட்டுகளை விற்றுவிடுங்கள். அதை அதிகாரப்பூர்வ ஐசிசி தளம் மூலமே விற்றுவிடுங்கள். இதை வைத்து நிறைய சம்பாதிக்கலாம் என்று தோன்றுவது இயல்புதான்.

ஆனால் என்ன

ஆனால் வசதி இல்லாத கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் பார்க்க வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். பணக்காரர்கள் மட்டும் அதிக காசு கொடுத்து போட்டியை ரசிக்க கூடாது. அதனால் அதிகாரப்பூர்வ தளத்தில் டிக்கெட்டை விற்றுவிடுங்கள், என்று கோரிக்கை வைத்துள்ளார்.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இவரின் கருத்துக்கு சில இந்திய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் சொல்வதும் சரிதான் என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர், ஏன் இவர் இந்தியர்களை வெளிநாட்டு மக்களுக்கு முன்னிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் போல தவறாக சித்தரிக்கிறார் என்று கூறியுள்ளனர். இவரின் கருத்துக்கு எதிராக இணையத்தில் பல இந்தியர்கள் களமாடி வருகிறார்கள்.

Story first published: Sunday, July 14, 2019, 13:44 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+