கிரிக்கெட் விளையாட வேண்டாம்.. சந்தோசமாக இருங்கள்.. முன்னணி வீரரின் சோக டிவிட்.. பரபரப்பு!
Recommended Video
லண்டன்: நியூசிலாந்து அணியை சேர்ந்த முன்னணி வீரர் ஒருவர் செய்த டிவிட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் வென்று முதல்முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பை சாம்பியன் ஆகியுள்ளது. சூப்பர் ஓவர் டை ஆன நிலையில் பவுண்டரி கணக்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டி கடைசி நொடி வரை பரபரப்பாக சென்றது. இதன் மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து மகுடம் சூடி இருக்கிறது.

என்ன நீசம்
வெற்றிக்கு மிக அருகில் வந்து, ஒரு ரன்கள் கூட வித்தியாசம் இல்லாமல் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி வீரர்களை முடக்கி போட்டு இருக்கிறது. முக்கியமாக நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர்கள் இந்த தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கேன் வில்லியம்சன் மட்டுமே இந்த தோல்வியை அசால்ட்டாக எதிர்கொண்டார்.

என்ன சொன்னார்
இந்த தோல்வி நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசமை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர் வரிசையாக இந்த தோல்வி குறித்து டிவிட்டரில் தொடர்ந்து டிவிட் செய்து புலம்பி வருகிறார். கிரிக்கெட் ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதலாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வேண்டாம்
இந்த நிலையில் நீசம் தனது டிவிட்டில் ''குழந்தைகளே உங்கள் எதிர்காலத்திற்கு கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறையை தேர்வு செய்ய வேண்டாம். சமைப்பது போன்ற ஏதாவது ஒரு துறையை எடுங்கள். 60 வயதில் நல்ல உடல் எடையுடன் சந்தோசமாக மரணம் அடையுங்கள்'' என்று விரக்தியில் டிவிட் செய்துள்ளார்.
இன்னொரு டிவிட்
அவர் இன்னொரு டிவிட்டில், அது வலிக்கிறது. அடுத்த 10 வருடங்களுக்கு நான் போட்டியின் கடைசி 30 நிமிடத்தை பற்றித்தான் நினைப்பேன். ஒன்று இரண்டு நாட்கள் வேண்டுமானால் அதை பற்றி நினைக்காமல் இருப்பேன் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் இங்கிலாந்து அணி, நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications