Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்தில் திடீர் என்று காணாமல் போன ஜோ ரூட்.. அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து அணி.. சுவாரசிய வீடியோ!

Recommended Video

களத்தில் திடீர் என்று காணாமல் போன ஜோ ரூட்..வீடியோ

லண்டன்: நேற்று தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பாதியில் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இங்கிலாந்திற்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இடையில் போட்டி நடந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு போட்டி தொடங்கியது.

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது. அதன்பின் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி 39.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் தென்னாபிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து என்ன

இங்கிலாந்து என்ன

இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து அணி 20வது ஓவர் வீசிய போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அப்போது டி காக் 66 ரன்கள் எடுத்து இருந்தார். டெர் டுசென் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். வந்த பந்துகளை எல்லாம் டெர் டுசென் பவுண்டரியை நோக்கி அனுப்பிக் கொண்டு இருந்தார்.

 டெர் டுசென் சிக்ஸ்

டெர் டுசென் சிக்ஸ்

அப்போது 21.1 வது ஓவரில் டெர் டுசென் சிக்ஸ் ஒன்று அடித்தார். இந்த சிக்ஸ் பவுண்டரி லைனை தாண்டி வெளியே சென்றது. சரியாக பவுலரின் தலைக்கு மேல் உயரத்தில் அந்த பறந்து சென்றது. எதிரே இருக்கும் கருப்பு நிற ஸ்கிரீனை தாண்டி அந்த பந்து உள்ளே சென்றது.

இங்கிலாந்து அணி எப்படி

இதை எடுக்க இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட் உள்ளே சென்றார். அவர் மிக எளிதாக அந்த கருப்பு நிற ஸ்கிரீனை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார். ஆனால் உள்ளே சென்றவர் அதற்கு பின் சில நிமிடம் ஆகியும் வெளியே வரவில்லை. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

4 நிமிடங்கள் உள்ளே

4 நிமிடங்கள் உள்ளே

சுமார் 4 நிமிடங்கள் அவர் உள்ளேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில இங்கிலாந்து வீரர்களுக்கு அவர் உள்ளே சென்றதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் சிலர் பந்து எங்கே சென்றது என்று தேட தொடங்கினார்கள்.

ரூட் எங்கே

ரூட் எங்கே

இன்னும் சில வீரர்கள் ரூட் எங்கே பாஸ் போனார் என்று தேடிக்கொண்டு இருந்தனர். அதன்பின் அம்பயர் வேகமாக சென்று ரூட்டிற்கு உதவி செய்ய முயன்றார். கருப்பு ஸ்கிரினுக்கு பின் அவர் மாட்டிக்கொண்டு இருந்தார். அதை திறந்த ரூட் வெளியே வர அம்பயர் உதவினார்.

செம சம்பவம்

செம சம்பவம்

இந்த சம்பவம் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ரூட் வெளியே வருவதை பார்த்த இங்கிலாந்து வீரர்கள் அவரை பார்த்து சிரித்தனர். இன்னும் சிலர் அட பாவமே என்று அவர் பார்த்துக் கொண்டு நின்றனர். இதனால் போட்டி சில நிமிடங்கள் தடை பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 31, 2019, 13:05 [IST]
Other articles published on May 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+