
போட்டிகள் நடக்கிறது
உலகக் கோப்பை தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு போட்டி தொடங்கியது. நேற்று இங்கிலாந்திற்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இடையில் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்ய தீர்மானித்தது. முதல் போட்டி என்பதால் இதை காண பலர் ஆர்வமாக இருந்தனர்.

எப்படி ஆடினார்கள்
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது. உலகக் கோப்பை அணிகளில் மிக மிக சிறப்பான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணி என்றால் அது இங்கிலாந்து அணிதான். 6 பேட்ஸ்மேன்கள் வரிசையாக செஞ்சுரி அடித்தால் கூட ஆச்சர்யப்பட வேண்டியது கிடையாது. நேற்று போட்டியிலும் அப்படித்தான் நடந்தது.

அரை சதம்
ஜேசன் ராய், ரூட், மார்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரை சதங்களை கடந்தனர். எல்லோருமே பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணியை வலுவான ஸ்கோரை நோக்கி நகர்த்தி சென்றனர். இதனால் இங்கிலாந்து அணி எளிதாக 311 ரன்களை எடுக்க முடிந்தது.

அதன்பின் என்ன
ஆனால் அதன்பின் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி மிக மோசமாக விளையாடியது. அந்த அணிக்கு வரிசையாக அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்து இருந்தது. அதில் மிக முக்கியமான அதிர்ச்சி என்றால் அது ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுலிங்தான். தனது வேகப்பந்து வீச்சு மூலம் தென்னாபிரிக்கா அணியை நேற்று இவர் கதி கலங்க வைத்தார்.

சூப்பர் பவுன்சர்
நேற்று நடந்த போட்டியில் 3 வது ஓவரை இங்கிலாந்து அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசினார். அப்போது ஹாசிம் அம்லா பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். சரியாக 3.5வது பாலில், ஹாசிம் அம்லாவிற்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் பவுன்சர் ஒன்று போட்டார். இந்த பந்து 14 7கிமீ வேகத்தில் வந்தது.

அடி பட்டது
இந்த பந்து வேகமாக வந்ததால் அமலாவால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. அவர் தனது பேட்டை திருப்பும் முன் அது வேகமாக வந்து, அமலாவின் ஹெல்மெட்டில் பட்டு அவரை நிலைகுலைய வைத்தது. பந்து பட்ட வேகத்தில் ஹெல்மெட் சேதம் அடைந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

சோதனை
அதன்பின் வந்த மருத்துவர்கள் அமலாவை சோதனை செய்தனர். இந்த காயம் காரணமாக அம்லா பிரேக் எடுத்துவிட்டு, 30 ஓவர்களுக்கு பின்புதான் வந்து ஆடினார். இந்த பவுன்சர் மிக வேகத்தில் வந்தது, தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நேற்று போட்டி முழுக்க ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆதிக்கம் செலுத்தினார். இவர் மூன்று விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications