பயமே இல்லையா? பிரதமர் முன் இப்படியா நடந்து கொள்வீர்கள்.. வைரலான வீடியோ.. சர்ச்சையில் ஆர்ச்சர்!
Recommended Video
லண்டன்: பிரிட்டன் பிரதமர் தெரசா மே முன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் நடந்து கொண்ட விதம் பெரிய வைரலாகி உள்ளது.
கடந்த ஒன்றரை மாதமாக நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. உலகக் கோப்பை தொடரில் வென்று முதல்முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பை சாம்பியன் ஆகியுள்ளது.
சூப்பர் ஓவர் டை ஆன நிலையில் பவுண்டரி கணக்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து மகுடம் சூடி இருக்கிறது.

என்ன நடந்தது
இதையடுத்து நேற்று முழுக்க இங்கிலாந்து வீரர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள். முதலில் தங்கள் குடும்பத்தினருடன் இங்கிலாந்து வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின் பல்வேறு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்து ஏ அணி, பெண்கள் அணியினருடன் உலகக் கோப்பையை வைத்து புகைப்படமே எடுத்துக் கொண்டனர்.

நேற்று விழா
இந்த நிலையில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சென்று நேரில் சந்தித்தார்கள். தெரசாவிடம் வீரர்கள் எல்லோரும் ஆசீர்வாதம் பெற்றனர். இங்கிலாந்து வீரர்கள் எல்லோருடனும் தெரசா மே தனி தனியாக பேசினார். அவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

என்ன வீடியோ
இந்த நிலையில் தெரசாவுடன் போட்டோ எடுக்கும் போது இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் செய்த செயல்தான் பெரிய வைரலாகி உள்ளது. தெரசாவுக்கு அருகில் நின்று அவர், சக இங்கிலாந்து வீரர்களை ''கிச்சு கிச்சு'' மூட்டி விளையாடிக்கொண்டு இருந்தார். அதேபோல் வீரர்கள் தலையில் கொம்பு வைத்தும் கிண்டல் செய்து கொண்டு இருந்தார்.
பெரிய வைரல்
இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. என்ன ஜோப்ரா ஆர்ச்சர் மைதானத்தில் இருப்பது போல இவ்வளவு விளையாட்டுதனமாக இருக்கிறார். பிரதமருக்கு அருகில் நிற்கிறோம் என்ற எந்த பயமும் அவருக்கு இல்லை என்று சிலர் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். அதே சமயம் அவர் எப்படி ஜாலியாக இருக்கிறார் பாருங்கள் என்று பலர் கமெண்ட் செய்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications