Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அன்று அழுது கொண்டு இருந்தேன்.. அனுஷ்காதான் என் வாழ்க்கையை மாற்றியது.. கே எல் ராகுல் உருக்கம்!

Recommended Video

WORLD CUP 2019: IND VS SL | அனுஷ்காதான் என் வாழ்க்கையை மாற்றியது..கே.எல் ராகுல் உருக்கம்!

லண்டன்: கிரிக்கெட் போட்டிகளில் தான் மோசமான பார்மில் இருந்த போது அனுஷ்கா சர்மா எப்படி தனக்கு உதவி செய்தார் என்று கே எல் ராகுல் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி, இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது. ரோஹித் சர்மா ஒரு பக்கம் சதம் அடித்துவிட்டு அப்போதுதான் அவுட்டானார்.

இன்னொரு பக்கம் கே எல் ராகுல் அதிரடியாக சதத்தை நோக்கி சென்று கொண்டே இருந்தார். 70 ரன்கள் வரை பொறுமையாக ஆடிய கே எல் ராகுல் அதன் பின் அதிரடியாக ஆடினார்.

செஞ்சுரி அடித்தார்

செஞ்சுரி அடித்தார்

இந்த உலகக் கோப்பை தொடரில் முதலில் திணறிய கே எல் ராகுல் கடந்த மூன்று போட்டிகளாக நன்றாக ஆடி வருகிறார். வங்கதேசம் அணிக்கு எதிராக 77 ரன்கள், இலங்கை அணிக்கு எதிராக சதம் என்று மீண்டும் கே எல் ராகுல் பார்மிற்கு திரும்பி உள்ளார். இலங்கைக்கு எதிராக 118 பந்துகள் பிடித்த அவர் 1 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 111 ரன்கள் எடுத்தார்.

பெரிய சந்தோசம்

பெரிய சந்தோசம்

இந்த போட்டியில் கே எல் ராகுல் சதம் அடித்ததை பார்த்து அதிகம் மகிழ்ச்சி அடைந்தது இந்திய வீரர்களை விட அனுஷ்கா சர்மாதான். ஆம் கே எல் ராகுல் சதம் அடித்த போது, அனுஷ்கா சர்மா நிறைவான முகத்துடன் சிரித்துக் கொண்டு இருந்தார். அவர் முகம் முழுக்க ஒரு நிறைவு இருந்தது. அதேபோல் அவருடன் இருந்த மற்ற வீரர்களின் மனைவிகளும் கே எல் ராகுலுக்காக கைதட்டிக் கொண்டு இருந்தனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா குறித்து தற்போது கே எல் ராகுல் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். அதில், நான் அப்போதுதான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகி இருந்தேன். நான் அந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. இதனால் மிக மோசமான மனநிலையில் அழுது கொண்டு இருந்தேன். அப்போது என்னை பார்க்க வந்த அனுஷ்கா சர்மா. உடனே அவருடன் வரும்படி அழைத்தார்.

கோலி யுடன் சென்றோம்

கோலி யுடன் சென்றோம்

நான் உன்னை கிரிக்கெட் பற்றி நினைக்க விட மாட்டேன் . நீ, நான், கோலி மூன்று பேரும் இப்போதே வெளியே செல்வோம். மற்ற விஷயங்களை அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்ளலாம் என்று அனுஷ்கா கூறினார். நான், கோலி, அனுஷ்கா மூவரும் வெளியே சென்றுவிட்டு வந்தோம். அவர் தன் படங்கள் தோல்வி அடைந்த கதையை, அதில் இருந்து எப்படி மீண்டும் வந்தேன் என்று குறிப்பிட்டார்.

அது எனக்கு

அது எனக்கு

அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது. அதுதான் அன்று என்னை காப்பற்றியது. அவர் எப்போதும் நல்ல தோழியாக என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார். கோலியும், அனுஷ்காவும் என்னை பெரிய அளவில் மாற்றி இருக்கிறார்கள். என்னுடைய இந்த நிலைக்கும் அவர்கள்தான் காரணம் என்று கே எல் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, July 8, 2019, 11:57 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+