என்ன இப்படி சொல்லிட்டீங்க.. அப்போ இந்தியாவிற்கு ஜாக்பாட்தான்.. கேன் வில்லியம்சன் கருத்தால் பரபரப்பு!
Recommended Video
லண்டன்: இந்தியாவிற்கு எதிரான போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டி பெரிய வைரல் ஆகி உள்ளது.
கேன் வில்லியம்சன் தனது பேட்டியில் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி இன்று நடக்கிறது.
லீக் போட்டிகள் முடிந்து நடக்கும் முதல் செமி பைனல் போட்டி இது என்பதால் இந்த போட்டி அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

எப்படி
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி அளித்துள்ளார். அதில், ரவுண்ட் ராபின் முறையில் எல்லா அணிகளையும் எதிர்கொண்டது மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த தொடர் கஷ்டமாக இருக்கும் என்று தெரியும்.

ஆனால் என்ன
ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த தொடர் இன்னும் கஷ்டமாக இருந்தது. நிறைய வித்தியாசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதற்கு ஏற்றபடி எங்களால் மாற முடியவில்லை. கடைசி நேரத்தில் நாங்கள் சில தோல்விகளை சந்தித்தோம். நாங்கள் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முடியவில்லை
அதில் இருந்து நிறைய பாடங்களை கற்று இருக்கிறோம். நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை. இதற்கு ஏற்றபடி நாங்கள் உடனே மாற வேண்டும். பேட்டிங்தான் இந்த தொடரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். சில தோல்விகள் உண்மையில் கஷ்டமாக இருந்தது.
Hear more from New Zealand's skipper ahead of #INDvNZ 👇 pic.twitter.com/HGngKyYNPp — Cricket World Cup (@cricketworldcup) July 8, 2019 '>
எப்படி மாறும்
இந்த தொடரில் அணிகள் மட்டும் எங்களுக்கு போட்டியாக இல்லை. போட்டி நடக்கும் சூழ்நிலையும் பெரிய அழுத்தம் கொடுத்தது. பிட்ச் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்த தொடர் முழுக்க சேசிங் பெரிய அளவில் சவாலாக இருந்தது.

கஷ்டம்
ரவுண்ட் ராபின் முறை மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் இவ்வளவு கஷ்டமான முறையில் விளையாடிவிட்டு இப்போது நாக் - அவுட் செல்வது இன்னும் கஷ்டமாக இருக்கும். அதை நாங்கள் ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும், என்று கேன் வில்லியம்சன் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை
அவரின் இந்த பேட்டி பெரிய சர்ச்சையாகி உள்ளது. என்ன இப்போதே கேன் வில்லியம்சன் தோல்வி அடைந்த அணியின் கேப்டன் போல பேசுகிறார். ஏன் இப்போதே நம்பிக்கை இல்லாமல் அவர் சூழ்நிலைகளை காரணம் சொல்கிறார். அப்போது இந்திய அணிக்கு கண்டிப்பாக இன்று வெற்றி நிச்சயம் போல என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications