
கேள்வி
இந்த தொடர் முழுக்க ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. யார் தொடர் நாயகன் விருது பெற போவது என்று ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. இதற்கு ஐந்து வீரர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், ஷாகிப் அல் ஹசன், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது .

என்ன நிலவரம்
உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 5 சதங்களை இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அடித்து இருந்தார். அவர் மொத்தம் இந்த தொடரில் 648 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இருந்தார். இவர் 647 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த இடத்தில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் இருந்தார். இவர் 606 ரன்கள் எடுத்தார்.

கடைசி
அதற்கு அடுத்து நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 578 ரன்கள் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 556 எடுத்து இருந்தனர். இந்த நிலையில் ஸ்கோர் அடிப்படையில் ரோஹித் சர்மாதான் அதிக ரன்களை எடுத்துள்ளார். அதேபோல் விக்கெட் மற்றும் ஸ்கோர் அடிப்படையில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் (10 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.

ஆனால் என்ன
ஆனால் தற்போது உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகன் விருது (மேன் ஆப் தி சீரியஸ்) நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுலர்கர் இந்த விருதை கேன் வில்லியம்சனுக்கு அளித்தார். இவருக்கு உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











