Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நானா கிடையவே கிடையாது.. களத்திலேயே அதிர்ச்சி அடைந்த கேன் வில்லியம்சன்.. ஷாக் வீடியோ.. ஏன் தெரியுமா?

Recommended Video

WORLD CUP 2019 FINALS : NZ VS ENG | களத்திலேயே அதிர்ச்சி அடைந்த வில்லியம்சன்! ஏன் தெரியுமா?- வீடியோ

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு பின் நேற்று கேன் வில்லியம்சன் கொடுத்த ரியாக்சன் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

முதல்முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பை சாம்பியன் ஆகியுள்ளது. புதிய 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனாக இங்கிலாந்து மகுடம் சூடி இருக்கிறது.

சூப்பர் ஓவர் டை ஆன நிலையில் பவுண்டரி கணக்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி கடைசி நொடி வரை பரபரப்பாக சென்றது.

யார்

யார்

இதையடுத்து உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகன் விருது (மேன் ஆப் தி சீரிஸ்) நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 578 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவருக்கு மேன் ஆப் தி சீரிஸ் விருது வழங்கப்பட்டது.

யார்

யார்

சச்சின் டெண்டுல்கர் இந்த விருதை கேன் வில்லியம்சனுக்கு அளித்தார். உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 5 சதங்களை இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அடித்து இருந்தார். அவர் மொத்தம் இந்த தொடரில் 648 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இருந்தார். இவர் 647 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த இடத்தில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் இருந்தார். இவர் 606 ரன்கள் எடுத்தார்.

ஏன் இல்லை

ஏன் இல்லை

இவர்கள் மூவரில் ஒருவருக்குத்தான் மேன் ஆப் தி சீரிஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேன் வில்லியம்சனுக்கு கடைசியில் விருது வழங்கப்பட்டது. இந்த ஷாக்கிங் முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை. இது பலருக்கு அதிர்ச்சி அளித்தாலும், கேன் வில்லியம்சனுக்கு கொடுப்பதில் தவறில்லை என்றுதான் கூறினார்கள்.

ஷாக்

அட ரசிகர்கள் மட்டும் இந்த முடிவால் ஷாக் ஆகவில்லை. கேன் வில்லியம்சனே இந்த அறிவிப்பை கேட்டவுடன் ''என்ன நானா.. வாட்'' என்று ரியாக்சன் கொடுத்தார். அவரின் இந்த க்யூட் ரியாக்சன் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. மனுஷன் ரொம்ப அப்பாவியா இருக்கார் பாஸ் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Monday, July 15, 2019, 12:10 [IST]
Other articles published on Jul 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+