அவரை மறந்துவிட்டோம்.. எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி இந்திய வெற்றிக்கு உதவிய சைலன்ட் ஹீரோ.. சூப்பர் மேன்!
Recommended Video
லண்டன்: இந்திய அணி நேற்று வெற்றிபெறுவதற்கு கோலி, ஷமி, பும்ரா ஆகியோர் மட்டும் காரணம் கிடையாது. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர் ஒருவரும் காரணம்.
நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் இந்த பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சொதப்பு சொதப்பு என்று சொதப்பினார்கள். மார்க்க பந்து முதல் சந்து என்று சொல்வது போல ஒரு மார்க்கமாக வந்த பந்தை எல்லாம் சந்துக்குள் விட்டு அப்படியே அவுட்டாகி பெவிலியன் சென்றார்கள்.
கோலி மட்டும்தான் ஒரு பக்கம் நிலையாக ஆடிக்கொண்டு இருந்தார். கோலி ஒரு பக்கம் ஆடினாலும் இன்னொரு வீரர் நேற்று இந்திய அணிக்காக சிறப்பாக ஆடினார். இந்திய அணியின் டார்கெட்டை நேற்று அவர்தான் உயர்த்தியது.

டாஸ் வென்றது
இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் பேட்டிங் தேர்வு செய்தால் அதிக ரன்கள் அடிக்க முடியும். அப்படி செய்தால் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற முடியும். இதுதான் இந்திய அணியின் பிளான். ஆனால் நடந்தது ஆப்கானிஸ்தானின் பிளான். களமிறங்கிய இந்திய வீரர்கள் எல்லாம் வரிசையாக டாட்டா காட்டி பெவிலியன் திருப்பினார்கள்.

மோசம்
இந்த போட்டியில் கே எல் ராகுல் 30 ரன்கள், ரோஹித் 1 ரன், கோலி 67, விஜய் சங்கர் 29, தோனி 28, ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதிலும் கே எல் ராகுல் எல்லாம் மிக மோசமான ஷாட்டுகளை தொடக்கத்தில் இருந்தே விளையாடினார்கள். தோனி 50+ பந்துகள் பிடித்து மெதுவாக ஆடிக்கொண்டு இருந்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக குறைந்து கொண்டே இருந்தது.

யார் வந்தார்
இந்த நிலையில் 6 வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேதார் ஜாதவ் மிக மிக பொறுமையாக ஆடினார். ஆட்டத்தை உணர்ந்து தேவையில்லாத ஷாட்களை அடிக்காமல் பொறுப்பாக ஆடினார். இவர் கொஞ்சம் கொஞ்சமாக் சேர்த்த ரன்கள்தான் இந்திய அணிக்கு உதவியது. முக்கியமாக இவர் தேவையான நேரங்களில் பவுண்டரி மற்றும் சிக்ஸும் அடித்தார். 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்தார்.

எத்தனை ரன்கள்
நேற்று இவர் அடித்த 52 ரன்கள் தான் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. மொத்தம் 68 பந்தில் பொறுமையாக அவர் இந்த ஸ்கோரை அடித்து இருந்தாலும், இந்திய அணிக்கு அது மிக தேவையான ஸ்கோர் ஆகும். ஆனால் நேற்று இவர் அரை சதம் அடித்த போது கொண்டாடவே இல்லை. முக்கியமாக அதை அவர் பொருட்டாகவே நினைக்கவில்லை.

சைலன்ட் ஹீரோ
நேற்று இந்திய அணி மோசமான நிலையில் இருந்ததால் அவர் இப்படி கொண்டாடாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவரின் அரை சதத்தை பெரிய அளவில் ரசிகர்கள் கூட கொண்டாடவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். ஆனாலும் அமைதியாக தனக்கு கொடுத்த பணியை செய்துவிட்டு பெவிலியன் திரும்பினார் கேதார்!


Click it and Unblock the Notifications