Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு வீக்கான கேப்டனை நான் பார்த்ததே இல்லை.. கெவின் பீட்டர்சன் பகீர்.. யாரை சொல்கிறார்?

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், உலகிலேயே வீக்கான கேப்டனை பார்த்துவிட்டதாக பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. நேற்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி எளிதாக வெல்லும் என்று நினைத்தால் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.

44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 221 ரன்கள்தான் எடுத்தது. 64 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வி அடைந்தது.

நேற்று போட்டி

நேற்று போட்டி

இந்த நிலையில் நேற்று நடத்த போட்டி முழுக்க இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் மோசமாக திணறினார் . முக்கியமாக அவர் மிட்சல் ஸ்டார்க் பந்தில் திணறிக் கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய பந்தில் பொறுமையாக ஆடாமல் அடித்து ஆட முயன்றார். தேவையில்லாமல் நன்றாக வந்த ஷாட் பந்துகளையும் விலகி விலகி அடித்தார்.

என்ன ஆனது

என்ன ஆனது

இதை சரியாக கணித்த ஸ்டார்க் 5வது ஓவரில் அதே போல ஷார்ட் பந்து போட்டார். இதையும் விலகி அடிக்க இயான் முயன்று புல் செய்தார். ஆனால் அந்த பந்து சரியாக ஸ்கோயர் லெக் திசையை நோக்கி சென்றது. அப்போதுதான் அங்கு பீல்டரை நிறுத்தி இருந்தார் ஸ்டார்க். சரியாக அந்த பந்து அதனால், பாட் கும்மின்ஸ் கையில் போய் சிக்கி, மோர்கன் அவுட்டானார்.

கிண்டல் செய்தார்

கிண்டல் செய்தார்

இதை தற்போது இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கிண்டல் செய்துள்ளார் . அவர் தனது விமர்சனத்தில், இங்கிலாந்து கேப்டன் ஸ்டார்க் போட்ட பந்தில் சரியாக ஸ்கோயர் லெக் திசையில் அடிக்கிறார். இதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. இங்கிலாந்து இன்னும் சில நாட்களுக்கு மோசமான பிரச்சனைகளை சந்திக்கும் என்று தோன்றுகிறது. இப்படி ஒரு வீக்கான கேப்டனை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை, என்று கூறியுள்ளார்.

பெரிய வைரல்

பெரிய வைரல்

அவரின் இந்த விமர்சனம் பெரிய வைரலாகி உள்ளது. என்ன முன்னாள் வீரர் ஒருவர் இப்படி பேசிவிட்டார். அதுவும் இருவரும் ஒரே அணியில் ஒன்றாக விளையாடியவர்கள். நெருங்கிய நண்பர்கள் வேறு. அப்படி இருக்கும் போது, இப்படி விமர்சனம் செய்துவிட்டார் என்று டிவிட் செய்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, June 26, 2019, 13:47 [IST]
Other articles published on Jun 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+