Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவான் போக கூடாது.. சண்டை போட்ட கோலி.. சமாதானம் செய்த பிசிசிஐ.. இரவோடு இரவாக நடந்த டிவிஸ்ட்!

Recommended Video

தவானுக்கு பதிலாக இங்கிலாந்து செல்லும் இளம் வீரர் ?

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் வீரர் தவானை லண்டனை விட்டு அனுப்ப முடியாது என்று இந்திய அணியின் கேப்டன் கோலி பிசிசிஐயிடம் நேற்று வாதம் செய்து இருக்கிறார்.

தவானுக்கு ஏற்பட்ட காயம்தான் தற்போது இந்திய கிரிக்கெட் உலகில் முக்கிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. தவான் மீண்டும் அணியில் இணைவாரா, சென்ற போட்டியில் விளையாடியது போல அதிரடியாக ஆடுவாரா என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அவர் இப்போதைக்கு முழுமையான உடல் தகுதியை பெறுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். ஆனால் இதில் பிசிசிஐ வித்தியாசமான நிலைப்பாடு ஒன்றை எடுத்து இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டதுதான் தற்போது பிரச்சனை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி வந்தார். அப்போது தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அந்த ஓவரில் நைல் வீசிய பவுன்சர் சரியாக தவானின் இடது கையில் உள்ள கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது.

மிகவும் பெரிதானது

மிகவும் பெரிதானது

மிகவும் சிறிதாக இருந்த அந்த காயம் போக போக பெரிதானது. போட்டி முடியும் நேரத்தில் அவரது காயம் மொத்தமாக வீங்கி விரலை அசைக்க முடியாத நிலைக்கு சென்றது. இதையடுத்து இன்று மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர். அவரை மருத்துவர்கள் நேற்று தொடர்ந்து சோதனை செய்து வந்தனர்.

முடியாது

முடியாது

அதன் முடிவுகள் தவானுக்கு எதிராக வந்தது. இதனால் அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் நேற்று பிசிசிஐ தவானை கண்காணித்துவிட்டு பின்பு முடிவு எடுக்கலாம் என்று கூறி உள்ளது. தவான் லண்டனில் இருக்கட்டும், அவர் உடல் நிலையை பொறுத்து பின்பு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

பிசிசிஐ எடுத்த இந்த முடிவிற்கு கோலிதான் காரணம் என்கிறார்கள். இந்திய அணியின் தொடக்க வீரராக அட தவான் ரோஹித்தை தவிர தற்போது தகுதியான வீரர்கள் யாரும் இல்லை. கே எல் ராகுலை முதல் இடத்தில் இறக்கினால், 4வது இடத்தில் இறக்க ஆள் தேடுவது கடினம். இதனால் நேற்று பிசிசிஐ நடத்திய கூட்டத்தில் கோலி சண்டை போட்டு இருக்கிறார்.

என்ன சண்டை

என்ன சண்டை

அதன்படி தவான் இங்கேயே இருக்கட்டும். இரண்டு போட்டிகளுக்கு பின் அவரின் உடல்நிலையை சோதிக்கலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். தனது கருத்தில் கோலி நேற்று மிகவும் பிடிவாதமாக இருந்துள்ளார். கோலியின் இந்த கோரிக்கைக்கு பின்பே தவானை அனுப்ப வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்ததாக தெரிகிறது.

Story first published: Wednesday, June 12, 2019, 10:11 [IST]
Other articles published on Jun 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+