அவர்தான் வேண்டும்.. இல்லை கூடாது.. தவான் காயத்தால் இந்திய அணியில் குழப்பம்.. கோலி ரோஹித் மோதல்!
Recommended Video
லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் தவான் காயத்தால் தற்போது இந்திய அணியில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது. முக்கியமாக இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு இடையில் பிரச்சனை நிலவி வருகிறது .
இந்திய கிரிக்கெட் அணியில் ஓப்பனிங் வீரர் தவான் காயம் பட்டதால் தற்போது இந்திய அணி வீரர்கள் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவரின் இழப்பு இந்திய அணிக்கு உலகக் கோப்பை தொடரின் போது பெரிய பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் கையில் காயம் பட்டது. இந்த காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை. இதனால் தற்போது அணியில் சில குழப்பங்கள் நிலவி வருகிறது.

பெரிய அளவில் வெடித்தது
தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார்.அந்த ஓவரில் நைல் வீசிய பவுன்சர் சரியாக தவானின் இடது கையில் உள்ள கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. போட்டியின் முடிவில் இந்த காயம் பெரிதாகி, பெரிய அளவில் வீங்கியது குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்டுள்ளார்
நேற்று மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர். அவரை மருத்துவர்கள் நேற்று தொடர்ந்து சோதனை செய்து வந்தனர். இதனால் அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் நேற்று பிசிசிஐ தவானை கண்காணித்துவிட்டு இப்போது வேண்டாம் பின்பு முடிவு எடுக்கலாம் என்று கூறி உள்ளது.

இரண்டு போட்டி
ஆனால் தவான் என்ன செய்தாலும் இன்னும் இரண்டு போட்டிகளில் கண்டிப்பாக விளையாட முடியாது. எப்படியும் இன்னும் ஒரு வாரமாவது தவான் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் அதுவரை இந்திய அணிக்கு புதிய வீரரை ஓப்பனிங் வீரராக களமிறக்க வேண்டும்.

இதில்தான் சர்ச்சை
தற்போது இதில்தான் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக எப்படியும் கே எல் ராகுல்தான் இறங்க போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் 4வது இடத்தில் யாரை இறக்கலாம் என்பதே தற்போது பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு கோலி சில வீரர்களை பரிந்துரை செய்துள்ளார். அதே சமயம் ரோஹித் சர்மா வேறு சில வீரர்களை பரிந்துரை செய்து இருக்கிறார்.

யார் யார்
அதன்படி இந்திய அணியில் விளையாட கோலி ரிஷப் பண்ட் மற்றும் ஷேரேயஸ் ஐயரை பரிந்துரை செய்து இருக்கிறார். இவர்கள் இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள். ஆனால் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கரை பரிந்துரை செய்துள்ளார். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ரோஹித் இந்திய கேப்டனாக இருக்கும் நேரங்களில் இவர்கள் எப்போதும் வாய்ப்பு பெறுவார்கள்.

இதுதான் சண்டை
இதுதான் தற்போது மோதலுக்கு காரணமாக மாறியுள்ளது. ஏற்கனவே கேப்டன் பதவியை பெறுவதற்காக கோலி ரோஹித் இடையே மோதல் இருக்கிறது என்கிறார்கள். தற்போது இந்த மோதல் தேர்வு முறையிலும் நீடித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications