வாயை பிளந்து பார்த்த கோலி.. அதிர்ச்சி அடைந்த ரோஹித்.. அதிர்ந்த மைதானம்.. ஒரே விஷயம்தான் காரணம்!
Recommended Video
லண்டன்: நேற்று கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஆச்சர்யப்படும் அளவிற்கு மைதானத்தில் சூப்பர் சம்பவம் ஒன்று நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நேற்று அதிரடியாக வென்றது. நேற்று 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்தது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது. 4 விக்கெட்டுகள் எடுத்த ஷமி வெற்றிக்கு உதவினார். இதனால் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

பேட்டிங்
நேற்று போட்டி முழுக்க தோனிக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை. தோனி அதிக பந்துகளை குடித்துவிட்டார் என்று நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தோனி கடைசி நேரத்தில் அதையும் தனது பேட்டிங் மூலம் சரி கட்டினார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி அவர் நல்ல இலக்கிற்கு கொண்டு வந்தார்.

கீப்பிங்
ஆனால் நேற்று அவர் கீப்பிங்கில் மோசமாக சொதப்பினார். வரிசையாக இரண்டு முறை பந்துகளை பிடிக்க முயன்று தோல்வி அடைந்தார். தேவையில்லாமல் பைஸ் பவுண்டரி இரண்டை விட்டார். போட்டி முழுக்க அவர் பந்தை சரியாக கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் நேற்று பெரிய சர்ச்சையானது.
ஆனால் என்ன
ஆனால் இதற்கும் அவர் நேற்று போட்டியிலேயே பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், நேற்று போட்டியிலேயே அசத்தலான கேட்ச் ஒன்றை அவர் பிடித்தார். பும்ரா போட்ட பவுன்சரில் மேற்கு இந்திய தீவுகளின் பிராத்வைட் அடித்த பந்தை பறந்து, தாவி கீழே விழுந்து தோனி பிடித்தார். இதன் மூலம் தோனியிடம் கவனம் இல்லை என்று கூறிய விமர்சனங்களுக்கு எல்லாம் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

கோலி என்ன
பிராத்வைட் இதனால் 1 ரன்னில் அவுட்டானார். இந்த கேட்சை பார்த்துவிட்டு கோலி வாவ் என்று கத்தினார். மைதானத்தில் இருந்த எல்லோரும் ஆச்சர்யத்தில் கூச்சல் போட்டனர். அதேபோல் ரோஹித் சர்மாவும் இது சூப்பர் கேட்ச் என்று வியந்து டிவிட் செய்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications