எங்களால் தாங்க முடியவில்லை.. செய்தியாளர் சந்திப்பிலேயே உடைந்த கோலி.. தோல்விக்கு இப்படி ஒரு காரணமா?
Recommended Video
லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு என்ன காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்து இருக்கிறார்.
இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. நியூஸிலாந்திற்கு எதிராக கடைசி வரை போராடிய இந்திய அணி கடைசி நொடியில் தோல்வியை தழுவி உள்ளது.
இதன் மூலம் நியூசிலாந்து தற்போது இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்த மோசமான தோல்வி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கோலி பேட்டி
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்த கோலி, இந்த தோல்வியை எங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் மனதளவில் நாங்கள் பெரிய கஷ்டத்தில் இருக்கிறோம். இதற்காக பல நாட்கள் நாங்கள் கடும் பயிற்சி எடுத்தோம். இதை மனதில் கொண்டுதான் தொடர்ந்து உழைத்தோம்.

என்ன காரணம்
நாங்கள் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் கூட வந்தோம். ஆனால் ஒரே ஒரு நாள் சரியாக விளையாடாமல் போனது எங்கள் போட்டியை முடக்கி போட்டு உள்ளது. ஃபிளே ஆப் போட்டிகளுக்கு பதில் நாக் அவுட் போட்டிகள் வைத்ததுதான் இதற்கு காரணம் என்று கூட கூறலாம்.

ஒரே ஆட்டம்
ஒரே ஒரு நாள் ஆட்டம் எங்கள் கனவுகளை சிதைத்துவிட்டது. நாங்கள் பேட்டிங் செய்த முதல் 45 நிமிடம்தான் போட்டியை மாற்றியது. ஆனால் நாங்கள் போராடாமல் தோல்வி அடையவில்லை. ஸ்கோர் போர்டை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். கடைசி நொடி வரை போராடினோம்.

எங்கள் நாள்
இது எங்களுடைய நாள் இல்லை. முக்கியமான பேட்ஸ்மேன்கள் தேவை இல்லாத ஷாட்களை தேர்வு செய்து ஆடினார்கள். அதுதான் எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்த தோல்வி எங்களை நல்ல கிரிக்கெட் வீரர்களாக மாற்ற போகிறது, என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications