நாங்கள் நினைத்தது நடக்கவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.. தொடக்கத்திலேயே புலம்பும் கோலி.. ஏன்?
Recommended Video
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய கேப்டன் கோலி வருத்தமாக பேட்டி அளித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டி இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இதனால் இந்திய அணி சற்றுநேரத்தில் பேட்டிங் இறங்க உள்ளது.

என்ன சொன்னார்
இந்தநிலையில் டாஸ் தோல்வி குறித்து பேட்டி அளித்த கோலி, நாங்கள்தான் டாஸ் வெல்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. நாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் பவுலிங்தான் தேர்வு செய்திருப்போம். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்க மாட்டோம்.

வருத்தம் ஏன்
ஆனால் நாங்கள் நினைத்து நடக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. எங்களிடம் இரண்டு மணிக்கட்டு ஸ்பின் பவுலர்கள் இருக்கிறார்கள். அதனால் எங்கள் பவுலிங் ஆர்டர் வலுவாக இருக்கிறது. அதே சமயம் ஸ்பீட் பவுலர்களும் வலுவாக இருக்கிறார்கள்.

மழை
பிட்ச் மழை காரணமாக பவுலிங் செய்ய ஏற்றதாக இருக்கிறது. அதனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் அணியினரை சமாளிக்க முடியும். இந்த போட்டிக்கு உலகம் முழுக்க பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் நாங்கள் மனதில் ஏற்றுக்கொள்ள முடியாது.

எப்படி உள்ளனர்
இந்த அழுத்தத்தை நாங்கள் போட்டியின் போது காட்ட மாட்டோம். அப்படி காட்டினால் போட்டி பாதிக்கும். நாங்கள் எப்போதும் போல இயல்பாகவே ஆடுவோம். அதுவே எங்களுக்கு பலம் என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications