Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி பண்ணுனீங்க.. வேகமாக இறங்கி வந்த கோலி.. ரவி சாஸ்திரியுடன் சண்டை.. அதிர வைக்கும் வீடியோ!

Recommended Video

Kohli fight with ravi shastri | ஏன் இப்படி பண்ணுனீங்க.. சண்டை போட்ட கோலி- வீடியோ

லண்டன்: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டி நடந்து கொண்டு இருக்கும் போது இந்திய அணியின் கேப்டன் கோலி ரவி சாஸ்திரியுடன் வாக்குவாதம் செய்தது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு சுக்குநூறாக தகர்ந்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த செமி பைனல் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது.

ஜடேஜா மற்றும் தோனியின் ஆட்டம் காரணமாக கடைசியில் போட்டி கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்தது. அவர்களால் போட்டி கொஞ்சம் இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 மிக மோசம்

மிக மோசம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டு நாட்கள் நடந்தது. இந்தியாவிற்கு எதிராக 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை நியூசிலாந்து அணி அடித்தது. அந்த இலக்கை நோக்கி இந்தியா திணறி திணறி ஆடி வந்தது.

 என்ன சொதப்பல்

என்ன சொதப்பல்

நியூசிலாந்து பவுலர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். கோலி, ரோஹித், கேஎல் ராகுல் ஒரு ரன்களில் அவுட்டானார்கள். தினேஷ் கார்த்திக் 25 பந்துகள் பிடித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். பண்ட் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

 என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கோலி அவுட்டான பின் பண்ட் இறங்கியதும், அதன்பின் பாண்டியா இறங்கியதும் இந்திய அணியில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதுதான் நேற்று கோலியை கோபம் அடைய செய்ததாக கூறுகிறார்கள்.

ஏன் கோபம்

நேற்று கோலி அவுட்டான பின் பண்ட் இறங்கினார். அவர் அடித்து ஆட கூடிய வீரர். பொறுமையாக ஆட மாட்டார். ஆனால் அந்த மாதிரியான சூழ்நிலையில் மெதுவாக ஆடாது கூடிய வீரர்களைத்தான் களமிறக்க வேண்டும். ஆனால் நேற்று கோலி பெவிலியன் திரும்பும் முன் ரவி சாஸ்திரி பண்டை களமிறங்கினார். இதனால் கோலி சாஸ்திரியிடம் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

சண்டை

சண்டை

ஏன் அவரை அனுப்புனீர்கள் என்று கோலி சாஸ்திரியுடம் கோபமாக சண்டை போட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. சாஸ்திரி இன்னும் சில நாட்களில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 11, 2019, 10:19 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+