Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகமே எதிர்பார்க்கும் பாக். அணிக்கு எதிரான போட்டி.. ஆனால் இந்திய அணியில் 3 சிக்கல்.. பின்னணி என்ன?

லண்டன்: பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதும் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடக்கும் உலகக் கோப்பை லீக் ஆட்டம் இன்று மதியம் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று இந்த போட்டி நடக்க உள்ளது.

இந்த போட்டிக்காக இரண்டு நாட்டு வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக இவர்கள் இதற்காக பயிற்சி செய்து வருகிறார்கள்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இந்திய அணியில் இந்த போட்டிக்கு எதிராக 3 சிக்கல்கள் இருக்கிறது. இதில் இரண்டு சிக்கல்களை இன்று இந்திய அணி தீர்த்தாலும் ஒரு சிக்கலை தீர்ப்பது கடினம் என்று கூறுகிறார்கள். இந்திய அணி, இதற்காக கொஞ்ச தீவிரமாக ஆலோசனை செய்து அணியை தேர்வு செய்ய வேண்டி இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி பிரச்சனை

எப்படி பிரச்சனை

அதன்படி தவான் தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். காயத்தால் இவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது. இதனால் இன்று அவருக்கு பதில் யார் இறங்குவார் என்ற கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில் 95% அவரின் இடத்தில் கே எல் ராகுல்தான் இறங்குவார் என்று கூறுகிறார்கள். இது ஒரு வகையில் தீர்க்கப்ட்ட சிக்கல் என்று கூறலாம்.

இன்னொரு சிக்கல்

இன்னொரு சிக்கல்

இந்திய அணியில் தீர்க்கப்படாத சிக்கல் இன்னொன்று இருக்கிறது. அது 4வது இடத்தில் யாரை இறக்குவது என்பது. தற்போது அங்கு ஆடும் கே எல் ராகுல் ஓப்பனிங் இறங்கினால் இந்த இடத்தில் யார் ஆடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது கே எல் ராகுல் ஆடும் இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஆனால் என்ன பிரச்சனை

ஆனால் என்ன பிரச்சனை

ஆனால் இந்த இரண்டு சிக்கலையும் எளிதாக தீர்த்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தீர்க்க முடியாத பிரச்சனை என்றால் இந்திய அணியின் 7 வது பேட்ஸ்மேன் யார் என்பதுதான். தற்போது இந்திய அணியில் 7வது பேட்ஸ்மேனாக கேதார் ஜாதவ் இருக்கிறார். இவர் கடந்த போட்டிகளில் சரியாக ஆடவில்லை. சரியாக பவுலிங்கும் போடவில்லை. இதனால் அவரின் இடத்தில் யாரை இறக்குவது என்ற குழப்பம் நிலவி வருகிறது.

ஜடேஜா எப்படி

ஜடேஜா எப்படி

தற்போது ஜடேஜா நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் அவரை இந்த இடத்தில் இறக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் எப்போது சரியாக பேட்டிங் செய்வார்,எப்போது ரன் அதிக கொடுப்பார் என்பதை யூகிக்கவே முடியாது. இதனால் அந்த 7வது இடத்தில் ஆட்டத்தை மாற்றும் அளவிற்கு யாரை களமிறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, June 16, 2019, 13:43 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+