Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலி இருந்திருக்க வேண்டும்.. கத்தி போல தொங்கும் 4 விஷயங்கள்.. எப்படி சமாளிக்க போகிறார் கோலி?

Recommended Video

World Cup 2019 : கோலிக்கு முன் நிற்கும் சவால்கள்..எப்படி சமாளிக்க போகிறார்- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்திய அணிக்குள் நடக்கும் சில பிரச்சனைகள் இன்னும் சில நாட்களில் பூதாகரமாக வாய்ப்புள்ளது.

சில பிரச்சனைகள் பெரிதாகும் முன் கோலி அதை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் முடிவை நெருங்கி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.

இந்தியா செமி பைனலில் தோல்வி அடைந்த காரணத்தால் தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. இந்த தோல்வி இந்திய அணிக்குள் சில பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

தவறு

தவறு

இந்த தொடரில் தோல்வி அடைந்த காரணத்தால் கோலியின் தலைமை தற்போது கேள்விக்கு உள்ளாகி உள்ளது. என்னதான் தற்போது கோலி கேப்டனாக இருந்தாலும், ரோஹித் சர்மா கேப்டனாக முயன்று கொண்டு இருக்கிறார். கேப்டனாக வர வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று இந்த வருட தொடக்கத்தில் ரோஹித் பேட்டி அளித்து இருந்தார்.

என்ன நல்லது

என்ன நல்லது

அதேபோல் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தோல்வி அடைந்ததால் கோலியின் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட்டு ரோஹித்துக்கு வழங்கப்படலாம். உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு ரோஹித் முக்கிய காரணமாக இருந்தார். இதனால் தலைமை மாற்ற பிரச்சனையை கோலி சமாளிக்க ண்டும்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

தற்போது இருக்கும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பை தொடரோடு முடிகிறது. இதன் பின்பே புதிய பயிற்சியாளர் யார் என்பதற்கான பிரச்சனை வெடிக்கும். ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவுடன் கோலி சண்டை போட்டார். இதனால் அவருக்கு தோதான பயிற்சியாளரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்ய வேண்டும்.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

உலகக் கோப்பைக்கு பின் கண்டிப்பாக தோனி ஓய்வு பெற போகிறார். அவர் இப்போதே ஓய்வு பெறுவாரா அல்லது மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஓய்வு பெறுவாரா என்பதுதான் தற்போது கேள்வியாக இருக்கிறது. ஆனால் தோனி சென்ற பின் அவருக்கு சரியான மாற்றை கோலி கண்டுபிடிக்க வேண்டும். இனிமேலும் கோலி தோனியை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்க கூடாது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

அதேபோல் இந்த தோல்வி காரணமாக இந்திய அணியில் நிறைய குழப்பங்கள் வந்துள்ளது. மிடில் ஆர்டரில் யார் இறங்க வேண்டும் என்று பெரிய பிரச்சனை நிலவி வருகிறது. முக்கியமாக கடந்த இரண்டு வருடமாக மிடில் ஆர்டரில் யாரை களமிறக்குவது என்று தெரியாமல் இந்திய அணி குழம்பி வருகிறது. இதற்கு ஒரு அதிரடி வீரரை உடனே கண்டுபிடிக்க வேண்டும்.

சரி செய்ய வேண்டும்

சரி செய்ய வேண்டும்

இதை எல்லாம் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது கோலி உள்ளார். ஒரு காலத்தில் இந்திய அணியை பிரச்சனைகளில் இருந்து மீட்டு வடிவமைத்த கங்குலி போல செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தற்போது கோலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 12, 2019, 14:33 [IST]
Other articles published on Jul 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+