For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படிப்பட்ட வீரர் அவர்.. ஆனால் இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே.. இக்கட்டான நிலையில் கேப்டன் கோலி!

இந்திய அணியின் கேப்டன் கோலி இன்று அதிரடியாக ஆட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Recommended Video

Last Warning for Kohli : இன்று நடக்கும் போட்டி முக்கியமானது..கோலிக்கு ஐசிசி கொடுத்த வார்னிங்- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் கேப்டன் கோலி இன்று அதிரடியாக ஆட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளார்.

இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஏற்கனவே செமி பைனலுக்கு தேர்வாகி விட்டது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா நிதானமாக விருப்பப்பட்டது போல ஆடலாம்.

கோலி எப்படி

கோலி எப்படி

இந்த தொடர் முழுக்க கோலி மிகவும் நிதானமாக ஆடி வருகிறார். தொடர்ந்து அரை சதங்களை குவித்து அவர் சாதனை படைத்து வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 82, பாகிஸ்தானுக்கு எதிராக 77, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 67, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 72, இங்கிலாந்துக்கு எதிராக 66 ரன்கள் எடுத்தார்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

இதன் மூலம் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்துள்ளார்.ஆனால் இந்த தொடர் முழுக்க கோலி சிறப்பாக விளையாடினாலும் கூட இதுவரை அவர் ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை. முக்கியமாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தும் கூட கோலியால் சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

எப்போதும் 50 ரன்களை கடந்துவிட்டால் எளிதாக சதம் அடிப்பதுதான் கோலியின் ஸ்டைல். ஆனால் தற்போது அது அவரிடம் அதிகமாக மிஸ்ஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரை சதத்தை சதமாக மாற்ற முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

இன்று நடக்குமா

இன்று நடக்குமா

இதனால் இன்று நடக்கும் போட்டியிலாவது கோலி சதம் அடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகின் சிறந்த வீரரான இவர் ஏன் சதம் அடிக்க முடியாமல் மிஸ் செய்கிறார். அவருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்க தொடங்கி இருக்கிறார்கள். அவர் இன்று அதற்கெல்லாம் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, July 6, 2019, 15:40 [IST]
Other articles published on Jul 6, 2019
English summary
ICC World Cup 2019: Kohli has to play well in order to get his first century in the series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+