வழக்கு தொடுங்கள் கோலி.. நீங்கள் அவுட்டில்லை.. சர்ச்சைக்கு உள்ளாகும் பாக். ஆட்டம்.. என்ன நடந்தது?
லண்டன்: இந்தியா பாகிஸ்தான் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக கோலி வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் எல்லோரும் மிகவும் அதிரடியாக ஆடினார்கள். ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.
மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இதில் கோலி அவுட்டான சம்பவம் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எப்படி அவுட்
விராட் கோலி 77 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அமிர் பந்தில் அவுட்டாகி வெளியே சென்றார். ஆனால் உண்மையில் அவர் அந்த பந்தில் அவுட்டாகவில்லை. ஆம் அவர் அவுட்டே நேற்று ஆகவில்லை. ஆனால் தேவையில்லாமல் பெவிலியன் சென்றார். நடுவர் அவுட் கொடுக்காமலே இவர் அவுட் என்று நினைத்து, வெளியேறினார்.
என்ன சத்தம்
கோலி அவுட்டாகாமல், பந்து பேட்டில் பட்டதாக நினைத்து வெளியேறினார். பந்து அவர் பேட்டை கடந்து சென்ற போது டொக் என்று சத்தம் கேட்டது. அதேபோல் கோலியின் பேட்டும் லேசாக அதிர்ந்தது. இதனால் பேட்டில் பந்து பட்டதாக அவர் நினைத்தார். ஆனால் ரிப்ளேயில்தான் கோலி அவுட்டில்லை என்பது தெரிந்தது.

என்ன சிக்கல்
கோலியின் பேட்டில் ஹேண்டில் லூஸாக இருந்துள்ளது. அதனால் சத்தம் வந்திருக்கிறது, அதனால்தான் பேட் ஆடியது என்பது பின்புதான் சோதனைக்கு பின் தெரிந்தது. கோலி பேட்டிங் பிடித்த போது பந்து பட்டு சத்தம் வரவில்லை, பேட் ஆடி சத்தம் வந்தது என்பது தெரிய வந்தது. இதை தோனிதான் கண்டுபிடித்து சொன்னார்.

வழக்கு தொடுக்க வேண்டும்
இந்த நிலையில் கோலி அவர் பயன்படுத்தி வரும் பேட் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக கோலி செஞ்சுரி அடித்து இருக்கலாம். அது மிஸ்ஸாகி விட்டது. இதற்கு பேட்டில் ஏற்பட்ட குறைபாடே காரணம், அதனால் கோலி வழக்கு தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். கோலி பயன்படுத்தும் பேட் மிகப்பெரிய நிறுவனத்தின் ஸ்பான்சர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications