Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது உங்களுக்கு வலிச்சு இருக்கும்.. எனக்கு தெரியும்.. ரோஹித் சர்மாவிடம் உருகிய கோலி.. பின்னணி என்ன?

Recommended Video

ரோஹித் சர்மாவிடம் உருகிய கோலி.. என்ன காரணம் ?

லண்டன்: ரோஹித் சர்மாவிடம் இந்திய அணியின் கேப்டன் கோலி உரையாடிய வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. உலகின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்கள் இப்படி பேசிக்கொள்வது ஹிட் அடித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா செய்த டிவிட் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. 2011ல் அவர் போட்ட டிவிட் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

2011 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக தேர்வாகவில்லை. இதனால் வருத்தமாக டிவிட் செய்த ரோஹித் சர்மா, நான் ஏன் தேர்வாகவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இது எனக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பது உறுதி. நான் இதை கடந்து வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

என்ன வைரல்

என்ன வைரல்

இந்த டிவிட் தற்போது இணையத்தை கலக்கி இருக்கிறது. காரணம் 2019 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாதான் நம்பர் 1 பேட்ஸ்மேன். இந்த நிலையில் ரோஹித்தின் இந்த அசாத்திய பயணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி எடுத்தார். அவரிடம் இதுகுறித்து கோலி நிறைய கேள்விகள் கேட்டார்.

என்ன கேள்வி

என்ன கேள்வி

2011ல் நீங்கள் உலகக் கோப்பையில் விளையாடவில்லை. அப்போது நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள், உங்களுக்கு எவ்வளவு வலித்து இருக்கும் என்று தெரியும். சொல்லுங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, ஒரு விளையாட்டு வீரனாக நான் பழைய விஷயங்களை நினைப்பதே இல்லை.

இப்போது முக்கியம்

இப்போது முக்கியம்

இப்போது என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே எனக்கு முக்கியம். நான் இப்போது நடக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். ஒரு அணியாக நமது பேட்டிங் யூனிட்டை எப்படி வலிமை படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். உலகக் கோப்பை மிக முக்கியமான தொடர்.

சின்ன விஷயம்

சின்ன விஷயம்

இங்கு சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்த வேண்டும். நான் அதைத்தான் செய்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் கிடைத்த வெற்றிதான் இந்த மனநிலையை கொடுத்தது. அது தற்போது நீடித்து வருவது சந்தோசம் அளிக்கிறது. நான் வேறு எந்த விதமான பழைய விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில்லை கோலி, என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Monday, July 8, 2019, 10:28 [IST]
Other articles published on Jul 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+