Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ந்து நடக்கும் புறக்கணிப்பு.. ஏன் அவர் மீது நம்பிக்கை இல்லை.. கோலியின் முடிவால் எழுந்த சர்ச்சை!

Recommended Video

WORLD CUP 2019 IND VS BAN | வங்கதேசத்துக்கு 315 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் முக்கிய வீரரை கோலி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

இந்திய அணியில் வேகப்பந்து வீசும் பவுலர்களில் நம்பர் 1 பவுலர் யார் என்பதுதான் முக்கிய பெரிய கேள்வியாக இருக்கிறது. ஆனால் இந்த கேள்விக்கு கண்ணை மூடிக்கொண்டு பும்ரா என்று பதில் அளித்து விடலாம்.

ஆனால் நம்பர் 2 யார் என்று கேட்டால் அதற்கு பதில் அளிப்பது கடினம். இதற்கான கடுமையான போட்டி புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகியோருக்கு இடையில் நடந்து வருகிறது.

ஷமி எப்படி

ஷமி எப்படி

புவனேஷ்வர்குமார்தான் பிசிசிஐயை பொறுத்தவரை பும்ராவிற்கு ஜோடி. இவர்களை இருவரையும் களத்திற்கு அனுப்பவே எப்போதும் பிசிசிஐ நினைக்கிறது. முதல் நான்கு போட்டிகளிலும் இதே இணைத்தான் பந்து வீசியது. அதன்பின் பாகிஸ்தான் போட்டியில்தான் புவனேஷ்வர்குமார் காயம் காரணமாக வெளியேறினார்.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

அதன்பின் வந்த ஷமி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள், இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் என்று விக்கெட்டுகளை குவித்து வருகிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனாலும் ஷமி மீது கோலி உட்பட அணி நிர்வாகம் பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை. இதற்கு அவர் அதிக ரன் கொடுப்பது காரணமா, சரியாக டெத் ஓவர்களை வீசாதது காரணமா என்பது தெரியவில்லை. இதனால் ஷமிக்கு இந்திய அணியில் போதிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற புகார் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இன்றும் நடந்தது

இன்றும் நடந்தது

அது இன்றும் வெளியில் தெரிந்தது. ஆம் இன்று மூன்று ஸ்பீட் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் புவனேஷ்வர் குமார், பும்ராவிற்குத்தான் தொடக்க ஓவர்களை வீசி வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் 6 ஓவர்களை இவர்கள் இருவரும் மாறி மாறி வீசினார்கள். ஆனால் இவர்கள் ரன் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், விக்கெட்டும் எடுக்கவில்லை.

ஆனால் எப்போது

ஆனால் எப்போது

ஆனால் 7வது ஓவரில்தான் ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஓவரை அவர் மிகவும் சிறப்பாக வீசினர். அதன்பின் அதற்கு அடுத்து இவர் போட்ட 9வது ஓவரிலேயே விக்கெட் எடுத்தார். நிதானமாக ஆடிக்கொண்டு இருந்த தமீம் இக்பாலை கிளீன் போல்ட் செய்தார்.

எத்தனை போட்டிகள்

எத்தனை போட்டிகள்

இவருக்கு முன்பே ஓவர் கொடுத்து இருந்தால் தொடக்கத்திலேயே அவர் விக்கெட் எடுத்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் கோலி அதை செய்யவில்லை. இங்கிலாந்து போட்டியிலும் இடையில் 15 ஓவர் வரை ஷமிக்கு பந்து வீச வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 2, 2019, 20:25 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+