For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்கள் மீதுதான் தவறு.. மீண்டும் நடக்காது.. ஒப்புக்கொண்ட கோலி படை.. அடுத்தடுத்த நடவடிக்கை!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக மோதும் போட்டிக்கு முன்பாக இந்திய அணி சில சுயபரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

Recommended Video

WORLD CUP 2019: IND VS WI | நாளை போட்டி! இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு?- வீடியோ

லண்டன்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக மோதும் போட்டிக்கு முன்பாக இந்திய அணி சில சுயபரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி கடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் வென்றாலும் கூட, இந்த ஒரு வருடத்தில் இந்திய அணி ஆடிய மிக மோசமான ஆட்டம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்பின் தாக்குதலில் இந்திய அணி வீரர்கள் பொட்டிப்பாம்பாக அடங்கி போனார்கள். ஆனால் இந்த மோசமான விஷயத்திற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது.

காரணம் ஒன்று

காரணம் ஒன்று

இந்திய அணிக்கு அளிக்கப்பட்ட அதிகமான சுதந்திரம்தான் கடைசி போட்டியில் நிகழ்ந்த சொதப்பலுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட வெற்றிக்கு பின் இந்திய அணி வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிலாந்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் கடந்த ஒரு வாரம் முன்பே இங்கிலாந்து சென்றுவிட்டார்கள்.

நேரம் இல்லை

நேரம் இல்லை

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் இந்திய வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழித்தனர். இதனால் இந்திய வீரர்கள் சரியாக பயிற்சி செய்யவில்லை. சனிக்கிழமை போட்டி நடந்தது, ஆனால் வெள்ளிக்கிழமை இந்திய வீரர்கள் வார்ம் அப் கூட செய்யவில்லை.இதனால் இந்திய அணியின் பேட்டிங் பெரிய அளவில் சொதப்பியது. அதேபோல் இந்திய வீரர்கள் சில இடங்களுக்கு அவுட்டிங் சென்றார்கள். எல்லா வீரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவளித்தனர்.

தவறு

தவறு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே உலகக் கோப்பையில் இப்படி மோசமாக மறுநாள் போட்டியை வைத்துக் கொண்டு முதல் நாள் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தது. அதை இந்திய வீரர்களும் செய்தது சர்ச்சையானது. தற்போது போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக குடும்பத்தினரிடம் நேரம் செலவழிக்க, ஊர் சுற்ற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன கட்டுப்பாடு

என்ன கட்டுப்பாடு

அதன்படி போட்டிக்கு முதல்நாள் கண்டிப்பாக பயிற்சி செய்ய வேண்டும், அவுட்டிங் செல்ல அனுமதி இல்லை. போட்டிக்கு முதல் நாள் இரவு தேவையான உறக்கம் தேவை என்பதால் பார்ட்டி செல்ல கூடாது என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இப்படி வரிசையாக அதிரடி நடவடிக்கைகள் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளது.

தவறுதான்

தவறுதான்

இதில் இந்திய வீரர்கள் மீதுதான் தவறு என்பதை கோலி ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதுகுறித்து பேசி இருந்தார். இதனால் தற்போது இந்திய வீரர்களும் இந்த கட்டுப்பாடுகளை மதித்து தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள்.

தொடர் பயிற்சி

தொடர் பயிற்சி

இந்திய வீரர்கள் இன்றோடு சேர்த்து மூன்று நாளாக தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். எல்லா விதமான ஷாட்களையும், டெலிவரிகளையும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். சென்ற போட்டியில் நடந்த தவறு போல மீண்டும் நடக்க கூடாது என்பதில் மட்டும் இந்திய வீரர்கள் உறுதியாக உள்ளனர்.

Story first published: Wednesday, June 26, 2019, 11:09 [IST]
Other articles published on Jun 26, 2019
English summary
ICC World Cup 2019: Kohli learned from the match against Afghanistan, Prepares for worst in WI.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+